Thursday, September 8, 2016

கஃபாவின் மீது போர்த்தப்படும் போர்வைக்கு என்ன பெயர் ?




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ,,,
கஃபாவின் மீது போர்த்தப்படும் போர்வைக்கு என்ன பெயர் ?
============================
எப்போது அந்த போர்வை மாற்றப் படும்?
புது போர்வை போர்த்தப்பட்டால் பழைய போர்வையை என்ன செய்வார்கள் ?
இந்த போர்வை செய்ய எவ்வளவு செலவு ஆகிறது ?
அந்த போர்வை கருப்பு நிறம் மட்டும் தானா ?
இது போன்ற தகவல்களும்!!!
கஃபாவின் மீது போர்தப்படும் போர்க்கு பெயர் :கஃபாவின் மீது போர்த்தப்படும் கருப்பு நிறபோர்வைக்கு " ‪#‎கிஸ்வா‬ " என்று பெயர் சொல்லப்படும்.தங்க ஜரிகைகலால் ஆனது ,கஃபாவிற்க்கு போர்வை மாற்றம் வைபவம் என்றே ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறதுஎப்போது மாற்றப்படும்!!!
வருடந்தோறும்துல் ‪#‎ஹஜ்‬ பிறை 9 ம் நாள் ஹஜ்ஜோடு சேர்த்து இந்த போர்வையை மாற்றப்படுகிறது,
பழைய போர்வை !!!பழைய போர்வை சின்னஞ்சிறு துண்டுகளாகவெட்டப் பட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், பிரமுகர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

ஆனால் கலிஃபா உமர்[ ரலியல்லாஹூ அன்ஹூ ] ஆட்சி காலத்தில்அது ஹஜ் பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.14 -மீ-நீளமும் 101-செ.மீ அகலமும் கொண்ட 47 துண்டுகள் பயன் படுத்தப்படும்.
இந்த போர்வையின் நீளம் -658 ச.மீ ஆகும் 670-கிலோ பட்டு நூலும் 15 கிலோ அசல் தங்க ஜரிகை இழைகள் பயன்படுத்தப்படுகிறது .
இதற்காக ஆகும் செலவு சவுதி ரியால் -1கோடியே 70-லட்சம் என்று சொல்லப்படுகிறது.
அது இந்தியா ரூபாய் சுமார் 20-கோடியைஆகும். 
தொடும்போர்வை நெய்யப்பட்ட பிறகு திருக் குர்ஆன் வசனங்கள் ஜரிகை இழைகளால் கலைநயமிக்க எழுத்துக்களால் அதில் பின்னப்படுகின்றன .
கிஸ்வாவின் நிறம் ஒவ்வொரு ஆட்சியாளர் காலங்களில் ,ஒவ்வொரு நிறத்திலும் இருந்திருக்கிறது .ஆரம்பகாலங்களில்இந்த போர்வை மாற்றும் வைபவம். 
முஹர்ரம்-10-ஆம்நாள் நடை பெற்றது,பிறகுதான் அது துல்ஹஜ் மாதம்.துல்ஹஜ் மாதம் 9ஆம் நாள் அரஃபா நாளன்று பஜ்ர் தொழுகைக்கு பின்பு மாற்றுவார்கள் இதை சவூதி குர்ஆன் தொலைக்காட்சியில் நேரலை செய்வார்கள் இவ்வாண்டு மாற்றும்போது வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்
‪#‎இன்ஷாஅல்லாஹ்‬.
நன்றி
முகநூல் குரூப் சிறகுகள்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: