Monday, December 20, 2010

சுவர்க்கத்தை பரிசாக பெற்று தரும் நற்கிரியைகள்



(மெய்லில் வந்த தகவல் கள் இதை பார்ப்பவர்களுக்கும் பயன் படும், ஒரு டைரி போல் இங்கு சேமித்து வைத்துள்ளேன் பயடனைபவர்கள் , பயண்டைந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் தெரிய படுத்துங்கள்.)



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


1. அநாதையைப் பொறுப்பேற்றல்:
"அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).

2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:
"எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).

ஆயத்துல் குர்ஸி:

"அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.

3. வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை:
'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு:
أشهد أن لا اله الاالله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله
'அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்றும் சான்று பகருகிறேன்) என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பிய வாயிலால் நுழைய முடியும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

4. அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் தொடர்ச்சியாக தொழுது வருதல்:
'எவர் அஸர் தொழுகையையும், சுபஹ் தொழுகையையும் (பேணிப் பாதுகாத்து) தொழுது வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

5. ஐவேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருதல்:
"எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், நஸாஈ).

6. ஸலாத்தை பரப்புதல்:
"உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரை, சுவர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம் கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7. வுழூச் செய்த பின் இரண்டு ரக்அத் மனப்பூர்வமாகத் தொழுதல்:
'ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்து உளப் பூர்வமாக இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

8. கல்வியைத் தேடல்:
"எவர் கல்வியைத் தேடி வெளியேறிச் செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலகு படுத்துகிறான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

9. பெற்றோருக்கு நன்மை செய்தல்:
அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும். இறைத் தூதரிடம் அவர் யார் எனக் கேட்கப்பட்டது? "பெற்றோர்களின் இருவரையோ அவர்களின் ஒருவரையோ முதிய வயதில் அடைந்து, பின்பு அவன் (அவர்கள் மூலம்) சுவர்க்கம் நுழையவில்லையானால் அவனேயாவான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10. நாவையும், மர்மப் பகுதியையும் பேணுதல்:
"எவர் இரு தாடைகளுக்கும், தொடைகளுக்கும் மத்தியில் உள்ளதை பாதுகாக்கிறேன் என பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

11. முஅத்தீனின் அழைப்புக்கு மறுமொழி பகருதல்:
"முஅத்தீன் (அழைப்பாளர்) பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர் அதே போன்று சொல்ல் வேண்டும், 'ஹய்யஅலஸ் ஸலாஹ், ஹய்யஅலல் பலாஹ்' என்று சொல்லும் போது மாத்திரம் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி' என்று சொல்ல வேண்டும், பின்பு முஅத்தீன் 'லா இலாஹ இல்லல்லாஹ்'என்று சொல்லும் போது யார் தூய உள்ளத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று பதில் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

12. ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருதல்:
"எவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அவைகளாவன: லுஹருக்கு முன் 4ரக்அத்துகள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்துகள், மஃரிபுக்குப் பின் 2ரக்அத்துகள், இஷாவுக்குப்பின் 2 ரக்அத்துகள், பஜ்ருக்கு முன் 2ரக்அத்துகள்". (திர்மிதி)

13. அல்லாஹ்வின் 99 திருநாமங்களை மனனமிட்டு அதன்படி செயல்படுதல்:
"அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன. எவர் அவைகளை மனனமிட்டு அதன்படி செயல்படுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

14. நான்கு விடயங்கள் ஒரு சேர பெற்று விட்டவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்:
"உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்? என நபி (ஸல்) அவர்கள் குழுமியிருந்த தனது தோழர்களிடம் வினவினார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்கு நான் என்றார்கள். இன்று உங்களில் நோயாளியை சுகம் விசாரிக்க சென்றது யார்? என அன்னார் வினவினார், அதற்கும் நான் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என அன்னார் கேட்டபோது, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்று உங்களில் ஏழைகளுக்கு உணவளித்தவர் யார்? என அன்னார் கேட்டார், அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். எவருக்கு மேற் கூறப்பட்ட இவ்விடயங்கள் ஒரே நாளில் ஒரு சேர கிடைத்துவிடுமோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்து விடுவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

15. இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்:
"முஆதே! எவர் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

16."லா இலாஹ இல்லல்லாஹ்" வை உளத்தூய்மையுடன் மொழிதல்:
"எவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உளத்தூய்மையுடன் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

17. எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் நுழைவர்:
"நபி (ஸல்) அவர்கள்: எனது சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையும், தண்டனையுமின்றி சுவர்க்கம் நுழைவார்கள் எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். அங்கிருந்தோர் தங்களுக்குள் அந்த எழுபதாயிரம் பேர் நபியோடு தோழமை கொண்டு இருந்தவர்கள், மற்றும் சிலர் இல்லை அவர்கள் இஸ்லாத்தில் பிறந்து அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காதவர்கள். வீட்டைவிட்டு வெளியில் வந்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்க நடந்தவைகளைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் அந்த எழுபதாயிரம் பேர்:

மந்திரித்துப் பார்க்காதவர்கள், மந்திரித்துப் பார்க்குமாறு கோராதவர்கள், பறவை சாஸ்த்திரம் பார்க்காதவர்கள் முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்திருக்கக் கூடியவர்கள் எனக் கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எழுந்து நபியே நானும் அவர்களுடன் இருக்க பிரார்த்தியுங்கள், நீரும் அவர்களுடன் இருப்பீர் எனக் கூறினார்கள். மற்றொருவர் எழுந்து தனக்கும் பிரார்த்திக்குமாறு வேண்டினார், அதற்கு நபியவர்கள் "உக்காஷா"உம்மை முந்திவிட்டார் எனக்கூறினார்கள். (முஸ்லிம்).

"நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்" (குர்ஆன் 8:107,108).


__._,_.___

.

__
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

Vassalam

Esa
--

14 comments:

அப்பாதுரை said...

6,10,14 பல மதங்களில் ஒற்றுமை இருக்கும் போலிருக்கிறது.
பெயருக்கு ஏற்றாற்போல் முத்தாகவே இருக்கிறது.

Jaleela Kamal said...

வாங்க அப்பாதுரை வருகைக்கு மிக்க நன்றி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Jaleela Kamal said...

ஏன் பயந்து கொண்டு அனானியாக வரனும்
இதில் உள்ள துஆக்கள் மற்றூம் மெயில் மெசேஜ் கள்நான் எனக்காக போட்டு கொள்கிறேன்.

வேண்டியவர்கள் ஓதி பயனடைந்து கொள்ளுங்கள்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Jaleela Kamal said...

//தாயே Jaleela, தங்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. சிறிது சிந்தித்து பாருங்கள். பர்தா என்பது அரேபிய ஆண் ஆதிக்கம்.
April 24, 2011 8:16 PM /

பர்தா என்பது அரேபிய ஆண் ஆதிக்கம் இல்லை

அவரவர் விருப்பம் தான் யாரையும் கட்டயாப்படுத்தவில்லை,

தயவு செய்து தக்கம் வேண்டாம்

என்ன சொன்னாலும் நீங்கள் யாவரும் இந்த கேள்வி களை கேட்டு கொண்டே தான் இருப்பீர்கள்

எங்களிடம் இது போன்ற கேள்விகளை கேட்கும் முன் குர் ஆனை பற்றி அத்தியாயங்கள் அதில் உள்ள விளக்கஙக்ளை பற்றி முடிந்தால் தெரிந்து கொள்ளுஙக்ள் .
அதை பற்றி தெரிந்து இருந்தால் இது போல கேள்விகளை எழுப்ப மாட்டீர்கள்..

Anonymous said...

@Jaleela Kamal, சரி சகோதரி, no more comments :) !.

Jaleela Kamal said...

Aashiq Ahamed has left a new comment on your post "சுவர்க்கத்தை பரிசாக பெற்று தரும் நற்கிரியைகள்":

சகோதரர் தமிழன்,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

இறைவன் கட்டளைப்படி தங்களுடன் ஆரோக்கியமான முறையில் உரையாட எண்ணுகின்றேன். உங்களுக்கு பதில் சொல்லுமளவு இறைவன் எனக்கு கல்வி ஞானத்தை கொடுத்திருந்தால் நிச்சயம் பதில் சொல்லுகின்றேன். இன்ஷா அல்லாஹ்.

உரையாடலை துவங்கும் முன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம். இதற்கு தாங்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் உரையாடலை தொடர்வோம்.

1. நாங்கள் தவறான கொள்கையில் இருப்பதால், எங்களை காப்பாற்ற வேண்டும் என்ற உங்களது நல்ல எண்ணம் எனக்கு புரிகின்றது. அது போல, நீங்களும் தவறான கொள்கையில் இருப்பதாகவே நான் எண்ணுகின்றேன். எப்படி என்னை காப்பாற்ற வேண்டுமென்ற நல்லெண்ணம் உங்களுக்கு இருக்கின்றதோ அதுபோலவே உங்களை காக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கும் இருக்கின்றது. ஆகையால், என் மார்க்கத்தை பற்றி ஒரு கேள்வி நீங்கள் கேளுங்கள். உங்கள் கொள்கையை பற்றி நான் ஒரு கேள்வியை கேட்கின்றேன். நீங்கள் நாத்திகரராக, அக்னாஸ்டிக்காக, வேறு மதத்தை சேர்ந்தவராக, கடவுள் இருக்கிறார் ஆனால் மதங்களை நான் நம்புவதில்லை என்ற கொள்கையுடையவராக என்று ஏதுவாகிலும் இருக்கலாம். நீங்கள் எந்த கொள்கையை சார்ந்தவர் என்பதை முதலில் தெளிவாக தெரிவித்து விடுங்கள் (நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தாலும் இன்னொரு முறை தெளிவாக கூறி விடுங்கள்).

அப்புறம், சில விளக்கங்கள்.

(i) அனானியாக வந்து கமெண்ட் போட்டது நீங்களா?
(ii) என்னால் அதிக நேரத்தை இணையத்தில் ஒதுக்க முடியாது. ஆகையால், தங்களின் கேள்விகளுக்கு இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் பதில் அளிக்க முயல்கின்றேன். அப்படி முடியாத பட்சத்தில் தாங்கள் தவறாக எண்ணாமல் என் நிலையை புரிந்து கொண்டு என்னுடைய பதிலுக்காக காத்திருக்கவும்.

தாங்கள் இதற்கு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் நம்முடைய உரையாடலை தொடங்கலாம்.

உண்மையை கண்டறிய இறைவன் உங்களுக்கும் எனக்கும் உதவி புரிவானாக..ஆமீன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Jaleela Kamal said...

G u l a m has left a new comment on your post "சுவர்க்கத்தை பரிசாக பெற்று தரும் நற்கிரியைகள்":

நம் அனைவரீன் மீதும் ஏகன் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..!
பெயர் வைக்க மறந்த சகோதரர் மற்றும் தமிழன் அவர்களுக்கு., முதலில் நீங்கள் தமிழர்கள்(?) என்றால் வார்த்தையில் கண்ணியம் காத்துக்கொள்ளுங்கள்., இது ஒரு பெண் நடத்தும் வலைப்பூ, மேலும் இங்கு உலவுவதும் அதிக பெண்களே... அரேபிய நாகரிகத்தை சாடும் நீங்கள் எந்த நாகரிகத்தில் இருக்கிறீர்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள்.,
மனித நாகரிகம் மண்ணில் மறையும் போதல்லாம் அதன் வெளிபாடு இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சியாக மாறி கொண்டுதான் இருக்கிறது.ஆக இதைப்போன்ற விமர்சனம் இஸ்லாத்திற்கும் புதிதல்ல... அல்ஹம்துலில்லாஹ் எங்களுக்கும் புதிதல்ல...எனினும் கேட்பதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது சகோதரரே.,மேலும் உங்கள் சாடலில் இஸ்லாமிய கொள்கைகளை எதிர்ப்பதற்கு உண்டான எந்த அறிவுப்பூர்வமான தகவலும் இல்லை., நீங்கள் மேற்கோள் காட்டும் இந்த ஹதிஸ்களும், இறை வசனங்களும் உங்களுக்கு முன்பாகவே எம் சகோதரிகள் பார்த்தும் படித்ததும் தான்! உங்களுக்கு ஏனோ., அரபிய தேசம் மேல் ஏற்பட்ட வெறுப்பால் இஸ்லாத்தின் மீதான வார்த்தை வன்முறைகளை அரங்கேற்றியிருக்கிறீர்கள்., அதை உங்கள் வலைப்பூவிற்குள் சென்றால் மிக நன்றாய் காணமுடிகிறது.,
சரி நேரடியாக கேட்கிறேன்.,
(1)முதலில் நீங்கள் ஏற்று நடக்கும் கொள்கை குறித்து தெளிவாக சொல்ல முடியுமா..?
(2)தாங்கள் கூறும் படி இஸ்லாம் தவறேன்றால்., அதை விட சிறந்த ஒரு கோட்பாடை உலக மக்கள் அனைவரும் பொதுவாக கடைப்பிடிக்க உங்களால்..... அல்லது உங்கள் சமுகத்தால் தர முடியுமா..?
நீங்கள் உண்மையான தமிழராக இருந்தால்... இன்ஷா அல்லாஹ் காத்திருக்கிறேன்.
பதில்களோடு வாருங்கள்....

Jaleela Kamal said...

அன்னு said...

Anony,

பயப்படாதீங்க. சுவர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையில் ரொம்ப தூரமில்லை. ஜலீலாக்கா சுவர்க்கத்துக்கு போன பின் இந்த கேள்விகளுக்கான பதில் தெரிந்து கொண்டு வந்து, அந்நேரம் நரகத்திலிருக்கும் தங்களுக்கு கண்டிப்பாக பதில் தர து’ஆ செய்கிறேன். ஆமீன்.

ஜலீலாக்கா, மறந்துராதீய... :)))
April 24, 2011 9:42 AM
சுவனப்பிரியன் said...

'அவர்கள் உங்களுக்கு ஆடை: நீங்கள் அவர்களுக்கு ஆடை' -குர்ஆன் 2:187

ஆடை எப்படி ஒரு மனிதனின் மானத்தைக் காக்கிறதோ அது போல் கணவனும் மனைவியும் இஸ்லாம் வகுத்த வழியில் நடை போடுவதால்தான் இஸ்லாமிய குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. இதை மறுத்த மற்ற மார்க்கங்களில் விவாகரத்தும், பிரச்னைகளுமே பொங்கி வழிகிறது.

'சிலரை மற்றும் சிலரைவிட இறைவன் சிறப்பித்திருப்பதாலும் ஆண்கள் தங்கள் பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.'
-குர்ஆன் 4:34
ஒரு குடும்பம் சிறந்து விளங்க ஒரு தலைமை இருந்தால்தான் சிறப்புறும். வறுமையின் காரணமாக பெண்கள் தக்க பாதுகாப்போடு வேலைக்குச் செல்வதை இஸ்லாம் தடுக்கவில்லை. மனைவியின் செலவுக்கு கணவன் பொறுப்பேற்பதால் பெண்களின் சிரமம் குறைகிறது. வேலைக்கு பெண்கள் செல்வதால் படும் இன்னல்களை நான் முன்பு இட்ட இந்த இடுகையில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள். http://suvanappiriyan.blogspot.com/2011/01/blog-post_14.html

//நீங்கள் எத்தனை வயது உடையவராக இருப்பீர்கள்? உங்களுடைய கணவனுக்கு , உங்களை தவிர 71 கன்னிப்பெண்கள் இருப்பர்ர்களா? - நீங்கள் பெண்ணாகவே இருப்பீர்களா, அப்படி இருந்தால் பர்தா அணிந்து இருப்பீர்களா?//

இதற்கெல்லாம் குர்ஆன் விளக்கமாக பதிலளித்திருக்கிறது. மேலும் சொர்க்கத்துக்கு செல்லப் போகும் முஸ்லிமகளிடம் அங்கு செல்ல முடியாத நீங்கள் ஆதங்கப்படுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இயலாமையோ :-)
April 24, 2011 2:32 PM

Jaleela Kamal said...

அன்னு said...
ஒரு பெண்ணின் வலைதளத்தில் வந்து கேவலமாய் கேள்வி கேட்பதுமில்லாமல் “SO F.OFF) ” இப்படி வார்த்தைகளை உபயோகித்தும் விட்டு, பின் ‘தங்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல” என்று வேறு போட்டிருக்கிங்களே??? உங்களை எல்லாம் என்ன சொல்ல. சொந்த பெயரை போட்டு ப்ரொஃபைல் போட்டு எழுதறவங்ககிட்ட வந்து தன்னை வெளிக்காட்ட தைரியம் இல்லாத நீங்கள்லாம் இஸ்லாத்தையும் அரேபிய ஆதிக்கத்தையும் பேச வந்துட்டீங்க.

இங்க யாரும் பர்தா என்னன்னு தெரிஞ்சிக்க உங்களை வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடலை.கற்பனா சக்தியா நிஜ சக்தியானு, கண்டிப்பா மரணத்துக்கு அப்புறம் பாக்கத்தான் போறீங்க, அதுவரை How to self introduce yourselfன்னு எங்கேயாவது புக் இருந்தா தேடிப் படிங்க.
April 24, 2011 10:58 PM


அன்னு said...

குர்’ஆனை அடுத்த தடவை ஆராயறதுக்கு முன்ன --அதுதான் காப்பி பேஸ்ட் வேலை பண்ணறது, யாராவது ஒரு வரையை பிடிச்சு பிரிச்சு மேஞ்சு அவங்க புத்திக்கு எட்டுன மாதிரி எழுதி இருப்பாங்க...அதை அப்படியே ஒரு வலைதளம் ஆரம்பிச்சு ஒட்டி வெச்சி ஹிட்டடிக்க வேண்டியது!!

அடுத்த தடவை இந்த மாதிரி செய்யறதுக்கு முன்ன, குர்’ஆன்ல ‘நாஸிக் வ மன்ஸூக்’, ’முப்றாம் வ மு’அல்லக்’, ’ஃகத்ர்’,’ து’ஆ’ ன்னு இருக்கற விஷயங்கள் என்னன்னு படிங்க. அப்பத்தான் குர்’ஆன் விளங்கும். அரபிலர்ந்து தமிழ்ல மொழி பெயர்த்தால், தமிழ்ல அதைப் படிச்சிட்டு எனக்கு குர்’ஆன் தெரியும்னு தம்பட்டம் அடிக்கிறதுக்கு பேர் அறிவு இல்லை!! அரபி மொழியையும், கலாச்சாரத்தையும் தெரியாமல் வரி கட்டாம சம்பாதிக்க மட்டும் அந்த நாட்டை உபயோகப்படுத்திட்டு அவங்க எதிலெல்லாம் ஆதிக்கம் செய்றாங்கன்னு பாக்கறது அறிவில்லை. அப்படி நீங்க உணமைலயே ஆராய்ச்சி செய்யறவரா இருந்தால், ஒவ்வொரு வார்த்தையையும் தமிழ்ப்படுத்தி அதன் பின் மொத்த பொருள் என்னங்கறதையும் சொல்லி விளக்குங்க.
April 24, 2011 11:31 PM

Jaleela Kamal said...

சுவனப்பிரியன் said...

//எதிர்காலம்கூட தெரியாத ஒன்றை என்னால் கடவுளாக ஒத்துக்கொள்ளமுடியவில்லை. இந்த கற்பனா கதாபாத்திரத்தால் என்னை ஒன்றும் பண்ணிவிடமுடியாது.//

விதி என்ற ஒன்று இல்லாவிட்டால் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது இறைவனுக்கு தெரியாது என்று ஆகிவிடும். நாளை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியாத ஒருவன் எப்படி என் இறைவனாக இருக்க முடியும்? விதி இல்லை என்று சொன்னாலும் விபரீதம். விதி இருக்கிறது என்று சொன்னாலும் விபரீதம்.

விதி என்ற ஒன்றுக்கு மட்டும் எப்படி விளக்கம் அளித்தாலும் குழப்பமே வந்து நிற்கும். அதற்குரிய அறிவை இறைவன் நமக்கு கொடுக்கவில்லை.

'உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியிருப்பதில் நீங்கள் பூரித்து போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான்.'-குர்ஆன் 57:23

நடந்து விட்ட காரியங்களுக்குத்தான் விதியை நினைத்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். இனி வருங்காலங்களில் நம் விதி எது என்று நமக்கு தெரியாத காரணத்தால் விதி இல்லாதது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நாளை ஒரு விபத்தில் எனது காலும் கையும் வெட்டப்படும் என்பது எனக்கு முன்பே தெரியும் என்று வைத்துக் கொள்வோம். இன்று இரவு என்னால் நிம்மதியாக தூங்க முடியுமா? எனவே விதியைப் பற்றிய ஒரு தெளிவின்மை மனிதர்களுக்கு நன்மையே தருகிறது. எனவே தான் உலக கணக்கெடுப்பில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் முஸ்லிம்களிடம் மிக மிக கம்மியாக இருக்கிறது. எது நடந்தாலும் இறை விதிப்படியே என்று முஸ்லிம்கள் நம்புவதுதான் இதன் காரணம்.

'இறைவன் நாடியதை அழிப்பான்: நாடியதை அழிக்காது வைப்பான்: அவனிடமே தாய் ஏடு உள்ளது.'-குர்ஆன் 13:40

ஒரு மனிதன் வருங்காலத்தில் தான் நல்லவனாக வாழ வேண்டும், தனக்கு சொர்க்கத்தில் இறப்புக்குப் பிறகு வாழ்வு வேண்டும் என்றும் நற் கருமங்கள் செய்வதாகவும் இறைவனிடம் மனமுருகி பிரார்த்தித்தால், அந்த பிரார்த்தனையை ஏற்று தான் எழுதிய விதியை தானே மாற்றுகிறான் இறைவன்.

இதையேதான் வள்ளுவரும்

'ஆகூழால் தோன்றும் அசைவன்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி'-குறள் 371 என்கிறார்.

செல்வம் வந்து சேர வேண்டிய நல்ல வேளை வந்து விட்டால் ஒருவனிடம் ஊக்கமும் வாடா முயற்சியும் வந்து விடும். போக வேண்டிய வேளை வந்து விட்டால் சோம்பல் வந்து செயலிழக்கச் செய்து விடும். எனவே நமது எண்ணத்தில் நமக்கு நல்ல விதியாக வருங்காலம் வர வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வர வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

விதியை உங்கள் வாழ்க்கையில் விலக்க நினைத்தாலும் உங்களையும் மீறி அநத விதி உங்கள் முன்னால் வந்து நிற்கும் என்று குறள் 380ல் வள்ளுவர் விளக்குகிறார். இதில் மேலும் விளக்கப் புகுந்தால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் வந்து விடுவோம் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்வோம். :-)
April 25, 2011 4:22 AM


அன்னு said...

அறிவு ஜீவியாய் இருப்பதால்தான் இன்னமும் தரமிழக்காமல் மதிப்புடன் பதில் தருகிறோம். படித்தும் பாமரனை விட கேவலமான மொழி உபயோகிப்பதாலும், பெண்களின் இடத்தில் வந்து கேவலமான வார்த்தைகளை உபயோகிப்பதாலும் உங்களின் அறிவு நூலாம்படை போன்றதை தெரிந்து கொள்ள முடிகிறது. குர்’ஆனை எப்படி படிக்க வேண்டும், அப்படி படித்து விட்டு பின் குற்றம் சாட்டுங்கள் என்றால் உடனே நபிமொழிக்கு போயாகிவிட்டது. நபிமொழி மட்டும் என்ன செந்தமிழிலேயே எழுதப்பட்டதா...அதற்கும் அதே சட்டங்கள், அரபு மொழியின் இலக்கண விதிகளும் உள்ளன கற்றுக் கொள்வதற்கு. அடிமைகளை எப்படி கையாண்டார்கள் என்று தெரிந்தால்தான் இஸ்லாத்தில் அடிமைத்தனம் எப்படி வேரறுக்கப்படுகிறது என்று தெரியும்.

”அகர முதல..” குறள் மட்டும் படித்து விட்டு திருவள்ளுவர் உத்தமர், தூயவர் என்று சொல்லும் வாய், ‘காமத்துப்பால்’ அதிகாரம் வந்தவுடன் அய்யய்யய்யோ இந்த அசிங்கத்தையுமா எழுதியிருக்கிறார் என்று வீசிவிடும் வீரர்களல்லவோ நீங்கள், அதனால் நாங்கள் அறிவுஜீவிகளாகவே இருந்து விட்டுப் போகிறோம்.
April 25, 2011 7:49 AM

Jaleela Kamal said...

சுவனப்பிரியன் said...

//நீங்கள் , உங்களின் 6 வயது மகளை 53 வயது கிழவனுக்கு திருமணம் செய்து வைப்பீர்களா?//

இஸ்லாத்துக்கு முன்னர் ஜாஹிலிய்யாக் காலம் என்றழைக்கப்படும் மௌட்டீக கால அரேபியாவில் பெண்கள் மிகவும் இழிவானவர்களாகவே கருதப்பட்டனர். அவளது உரிமைகள் பறிக்கப்பட்டன; ஆண்களின் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கேளிக்கைப் பொருளாகவே கருதப்பட்டு வந்தாள். ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் முடிக்கக் கூடிய ஒரு கீழ்த்தரமான நிலையே காணப்பட்டது. இதனை நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விபரிக்கிறார்கள்:


“அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.


முதல் வகை, இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.


இரண்டாம் வகைத் திருமணம், ஒருவர் தம் மனைவியிடம் நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள் என்று கூறிவிட்டு அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளை விட்டும் அந்தக் கணவன் விலகியிருப்பான். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்ற வரை கணவன் அவளை ஒரு போதும் தீண்ட மாட்டான். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாள் எனத் தெரிய வந்தால், விரும்பும் போது அவளுடைய கணவன் அவளுடன் உடலுறவு கொள்வான். குலச் சிறப்பு மிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற அற்ப ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஹ்’ (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.


மூன்றாம் வகைத் திருமணம், பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்று கூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகிச் சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். இப்போது எனக்குக் குழந்தை பிறந்து விட்டது’ என்று கூறிவிட்டு அவர்களில் ஒருவனை நோக்கி ‘இவன் உங்கள் மகன் இன்னாரே’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.


நான்காம் வகைத் திருமணம், நிறைய மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள்.


இந்தப் பெண்கள் விலை மாதர்களாவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்துக் குழந்தை பிறந்தால் அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்று கூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை – பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் தந்தை எனக் கருதிய ஒருவருடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது.


சத்திய மார்க்கத்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது இன்று மக்களின் வழக்கிலுள்ள முதல் வகைத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்” [புகாரி: 5127].

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கருத்துவிடுகிறது; அவன் கோபமடைந்து விடுகிறான். எதைக்கொண்டு நன்மாராயம் கூறப்பட்டானோ அதைத் தீயதாகக் கருதி அந்தக் கெடுதிக்காகத் தன் சமூகத்தாரை விட்டும் ஒழிந்து கொள்கிறான். அதை இழிவோடு வைத்துக்கொள்வதா அல்லது அதை உயிரோடு மண்ணில் புதைத்து விடுவதா என்று குழம்புகிறான். அவர்கள் இவ்வாறெல்லாம் தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா” [அந்-நஹ்ல்: 58-59].

இது போன்ற காட்டுமிராண்டிகள் நிறைந்த அந்த அரபுகளை இன்று நாகரிக மனிதர்களாக மாற்றியது குர்ஆனும் முகமது நபியின் போதனையும் அல்லவா?
April 25, 2011 2:20 PM

Jaleela Kamal said...

சுவனப்பிரியன் said...

//ஐயா, இது முகமதுவின் பெயரை காப்பாற்ற முஸ்லிம்கள் கூறும் பச்சை பொய்.//

சகோதரிகள் அனனு, ஜலீலாவுக்கு!

இந்துத்வா வாதிகளால் தங்கள் இந்து மதம் அழிந்து விடாமல் இருப்பதற்காக முஸ்லிம்கள் மேல் சேற்றை வாரி இறைக்க உண்டாக்கப்பட்ட ஒரு அம்பி தான் தமிழன் என்ற பெயரில் எழுதும் அரைகுறை. இந்த அரைகுறைக்கு நீங்கள் என்னதான் ஆதாரம் கொடுத்தாலும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. இவருக்கு பதிலளித்து நமது நேரத்தை இனி வீணாக்க வேண்டாம்.

தமிழனுக்கு!

இன்னும் எத்தனை பொய்களை அரங்கேற்றினாலும் ஒரு இஸ்லாமிய பெண்ணணையோ ஆணையோ உங்களால் தடம் புரளச் செய்துவிட முடியாது.

இன்னும் பொட்டு கட்டுதல், குழந்தை திருமணம், உடன் கட்டை ஏறுதல், விபசாரம், வரதட்சணை போன்ற கொடுமைகள் இந்து மதத்தில் இன்றும் தலைவிரித்தாடுகிறது.. எனவே உமது மதத்தை முதலில் சீர் திருத்தப் பாரும். இல்லை என்றால் அவர்களும் இன்னும் சில நாட்களில் இஸ்லாத்தை நோக்கி வந்து விடக் கூடும். :-)

நீர் கேட்ட கேள்விகளுக்கு தக்க பதிலை அளித்து விட்டேன் ஆகையால் இனி உம்மோடு விவாதிக்க விருப்பமில்லை.

'வெறும் சப்தமாகவும் ஓசையாகவும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றதை ஏக இறைவனை மறுப்போரின் தன்மை உள்ளது. அவர்கள் செவிடர்கள், ஊமைகள், குருடர்கள் எனவே விளங்க மாட்டார்கள்.-குர்ஆன் 2:171
April 25, 2011 10:34 PM