
1. பொறுமை மகிழ்ச்சியின் திறவு கோலாகும்.
நூல்: தைலமீ. அறிவிப்பாளர்: ஹுஸைன்(ரலி)
2. பொறுமையை விட விசாலமா ஒன்றையோ, சிறப்பான ஒன்றையோ யாரும் கொடுக்கப்படவில்லை.
அறிவிப்பாளர்: அபூஸயீத் (ரலி) நூல்:புகாரி
3. அநீதி இழைக்கப்பட்டஎந்த அடியானும் அந்த அநீத்த்தில் பொறுமை காத்தால் இறைவன் அந்த அடியானுக்கு கண்ணியத்தை அதிகப்படுத்துவான்.
அறிவிப்பாளர்: அபூகப்ஷா (ரலி) நூல்: திர்மிதீ
4. கோபமான நிலையில் இரண்டு மனிதர்களுக்கு மத்தியில் எவ்வித தீர்ப்பும் வழங்காதீர்கள்
அறிவிப்பாளர்: அபூபக்ரா(ரலி) நூல்: முஸ்லீம்
5. நிச்சயமாக கோபம் ஷைத்தானிடமிருந்தே ஏற்படுகிறது.
அறிவிப்பாளர்: அதிய்யா(ரலி) நூல் அபூதாவூத்.
6. பிறறை வீழ்த்துபவன் உண்மையில் வீரனல்ல. கோபத்தை கட்டுபடுத்திக் கொள்பவனே உண்மையான வீரன்.
நூல்: புகாரி
7. இறைவனிட்த்தில் ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் என்று சொன்னால் கோபம் நீங்கி விடும்.
நூல்:முஸ்லீம்
(இந்த தொகுப்புகள் மாநபி காட்டிய மனித வாழ்கை என்ற புக்கிலிருந்து எடுத்து போட்டுள்ளேன்).
No comments:
Post a Comment