Sunday, April 1, 2012

*பிஸ்மி* சொல்லி குடிமா




சின்ன வயதில் ஓவ்வொரு நல்ல செயலும் எனக்கு கற்று கொடுத்தது என் கிரான்மா/

தண்ணீ குடிக்கும் போது என் செல்ல மவளே  கிழே உட்கார்ந்து பிஸ்மி சொல்லி குடிமா என்பார்கள்.

குழந்தைகளுக்கு தெரியாது அதில் விளையாடுவதும் , அதில் குடு குடுன்னு சத்தம் வரவழைத்து முட்டை விடுவதும் ,மூச்சு விடுவது ஒரே மூச்சில் குடிப்பதும் விளையாட்டாக செய்வார்கள்.இதனால் சில சமயம் புறையேற கூட செய்யும்.

குழந்தைகளுக்கு எப்போதும் தண்ணீர் கொடுத்தால் ஒரு கிளாசில் அவர்கள் குடிக்கும் ஒரு மொடக் அளவே ஊற்றி கொடுக்கனும். பிறகு திரும்ப திரும்ப குடிக்க வைக்கனும்.

தண்ணீர் உடலில் ஏற்படும் அனைத்து நோயிக்கும் நல்ல மருந்து.
ஒரு நாளைக்கு 2 லிட்டருக்கு மேலே தண்ணீர் குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் வாய் புண் , குடல் புண், கிட்னி பிராப்ளம் அனைத்துக்கும் நல்ல மருந்து.

இப்ப இருக்கிற காலக்கட்டத்தில் கனனியில் உட்கார்ந்தால் சிலருக்கு மணிகணக்காக சாப்பாடு தூக்கம் எல்லாமே மறந்து விடுகிறது.

காலை வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது மிகவும் நல்லது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@


நம் நபி (ஸல்) அவர்கள் 
வாழ்க்கை முறைகளை ஓவ்வோரு விடயத்தையும் அருமையான முறையில் மக்களுக்கு சொல்லி இருக்கிறார், அதில் தண்ணீர் பருகும் முறையை எப்படி குடிக்கனும், குடிக்கும் முன் என்ன சொல்லி குடிக்கனும், குடித்த பின் என்ன சொல்லனும் என்பதையும் கிழே உள்ள ஹதீஸில் பார்க்கவும்.

இதோ இஸ்லாம் குரலில் கண்ட ஹதீஸ்.

அபூஸயீது(ரழி)அவர்கள் மர்வான் அரசரிடம் சென்றனர்। “பாத்திரங்களில் ஊதுவதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தடைசெய்ததைத் தாங்கள் அறிவீர்களா?’ என்று மன்னர் கேட்டார். “ஆம்’, “ஒரே மூச்சில் தண்ணீர் குடிப்பதால் தாகம் நமக்குத் தீருவதில்லை’ என்றும், “பாத்திரத்தில் மூச்சு விடலாமா?’ என்றும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார். “உம் வாயைவிட்டு பாத்திரத்தை நகர்த்திக் கொண்டு பிறகு மூச்சு விடவும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். “தண்ணீரில் தூசிகள் இருக்கக் காண்கிறேன். வாயால் ஊதி அதனை ஒதுக்கி விடலாமா? என்று அவர் மேலும் கேட்டார்.

“அதை(சிறிது) கீழே ஊற்றுவதால் அது போய் விடும்’ என்று நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
 அறிவிப்பாளர்: அபுல் முஸன்னல் ஜுஹ்னிய்யீ ஆதாரம்: முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.

“உங்களில் எவரும் எதையாவது அருந்தினால், அதன் பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். 
அறிவிப்பார்: அபூ கதாதா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.

“நபி(ஸல்) அவர்கள் எதையாவது குடிக்கும் பொழுது (தம் வாயை அருந்தும் பாத்திரத்திலிருந்து எடுத்து) 3 முறை மூச்சு விட்டு வந்தனர்”
அறிவிப்பாளர்: அனஸ்(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ.

“ஒட்டகம் தண்ணீர் குடிப்பது போன்று, ஒரே மூச்சில் நீங்கள் நீர் அருந்தாதீர்கள் என்றாலும், இரண்டு மூன்று முறை மூச்சு விட்டு அல்லது எடுத்து எடுத்து தண்ணீர் அருந்துங்கள். மேலும், நீர் அருந்தும் போது “பிஸ்மி’யும் கூறுங்கள். நீர் அருந்தி விட்டால் “அல்ஹம்துலில்லாஹ்’ என்றும் கூறுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினர். 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: திர்மிதீ



1 comment:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
பகிர்வுக்கு நன்றி சகோ
ஜஸாக்கல்லாஹ் கைர