Thursday, January 29, 2015

உலக ஹிஜாப் தினம் - February 1st World Hijab Day - மெகா பரிசு போட்டி



ஏன் ஹிஜாப்- பரிசுப் போட்டி - கால நீட்டிப்புடன்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு சகோதர சகோதரிகளே..
பிப்ரவரி 1- உலக ஹிஜாப் தினத்தை முன்னிட்டு  இஸ்லாமிய பெண்மணி நடத்தும் இந்த வருடத்தின் முதல் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டு பரிசை தட்டி செல்லுங்கள்.


இஸ்லாமிய பெண்மனியில் பிப்ரவரி உலக ஹிஜாப் தினத்தை ஒட்டி மெகா பரிசு போட்டி



http://www.islamiyapenmani.com/2015/01/blog-post_16.html
உடலை மறைத்திருக்கும் பெண்கள் அறிவையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்ற பிம்பம்  இன்று பலர் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது. ஹிஜாப் பேணும் சகோதரிகள் ஒவ்வொருவரும் ஹிஜாப் குறித்தான கேள்விகளை கட்டாயம் எதிர்கொண்டிருப்பார்கள். அவர்களின் அனுபவங்களை பகிரவும், தங்கள் வீட்டு பெண்கள் எதிர்கொண்ட  கேள்விகளுக்கு ஆண்களின் பதில்களை பகிரவும் ஓர் அறிய வாய்ப்பு.

போட்டிக்கான  கேள்விகள் மற்றும் பரிசுகள் விபரம் கீழ்க்காணும் படத்தில்:
http://www.islamiyapenmani.com/2015/01/blog-post_16.html



  • உங்கள் பதில்கள் 20 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்..
  • நீங்கள்  எழுதும் படைப்பு இதற்கு முன் வேறு எந்த தளத்திலும் பிரசுரிக்கப்பட்டு இருக்கக்கூடாது. காப்பி பேஸ்ட்டாகவோ யாரோ வேறொருவரின் பதில்களாகவோ இருக்கக்கூடாது. கட்டாயம் உங்கள் சொந்த பதிலை மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
  • உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி:admin@islamiyapenmani.com
  • உங்கள் ஆக்கங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 
           பிப்ரவரி 15-02-2015 இந்திய நேரம் இரவு 11.59க்குள்
  • ஜனவரி 31-2015 என்ற போட்டியின் இறுதி தேதி வலையுக நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி 15-2015 வரை போட்டியின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் விருப்பமே எங்கள் விருப்பம்.
  • நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அனைவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பரிசினை வெல்லுங்கள்.

கவனிக்க: ஹிஜாப் என்பது நாகரீகமாய், ஒழுக்கமாய், இறுக்கமற்றதாக, முகம், கை மணிகட்டு, கால்பாதம் தவிர்த்து உடல் அங்கங்களை  வெளிகாட்டாத எந்த உடையையும் குறிக்கும்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: