நம் வாழ்க்கை படிப்பினைகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை குர் ஆனில் அல்லாஹ் 25 நபிமார்கள் மூலமாக அனைவருக்கும் தெரிவிக்கிறான்...
அதில் 25 நபிமார்களில் லுக்மான் ( அலை) ஒருவர் அவர் தன் மகனுக்கு அறிவுரை கூறியதை அத்தியாயம் 31 னில் சூரா லுக்மானில் குறிப்பிட பட்டுள்ளது.
சூரா லுக்மான் - 31
; 13,14,15,16,17,18,............
1) லுக்மான் அவர்கள் தன் மகனுக்கு உபதேசம் செய்யும் போது என் அருமை மைந்தனே நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே.
2) மகனே தொழுகயை நிறைவேற்றுவாயாக. நமையை கொண்டும் பிறரை ஏவுவாயாக.பாவமான காரியங்களில் இருந்தும் ( மனிதர்களை ) விலக்குவாயாக.
3) மகனே நன்மையை ஏவி தீமையை தடுப்பாயாக, மேலும் உனக்கு ஏற்படும் கஷ்டங்களில் பொறுமையுடன் சகித்துக் கொள்வாயாக.
4) மகனே தௌபா ( இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பதில்) செய்வதில் தாமதம் செய்யாதே ஏனெனில் மரணம் வருவதற்கு எந்த நேரம் என்பது நிர்ணயம் இல்லை.
5) மகனே பெருமை கொண்டு உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பி கொள்ளாதே பூமியில் கர்வமாக நடக்காதே.
நிச்சயமாக அல்லாஹ், தற்பெருமைகாரர், கர்வங்கொண்டோர் ஒவ்வொருவரையும் நேசிக்க மாட்டான்
6) மகனே பொய்யை விட்டும் உன்னை நீ மிகவும் பாதுகாத்துக்கொள்.
7) மகனே رب اغفرلي றப்பிஃபிர்லீ (இறைவா என்னை மன்னிப்பாயாக) என்பதை அதிகம் ஓதி வருவாயாக.
8) மகனே உலமாக்களின் சபைகளில் மிக அதிகம் அமர்ந்து அவர்களின் பேச்சை மிக்க கவனமாக கேட்பாயாக.
9) மகனே அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அச்சமற்று போய்விடாதே.
10) மகனே மக்கள் உன்னை விழுங்கி விடும் அளவுக்கு இனிப்பாகவும் அதே சமயம் உன்னை துப்பி வடும் அளவுக்கு கசப்பாகவும் ஆகி விடாதே.
11) மகனே மடையர்களுடன் நட்பு வைக்காதே.
12) மகனே நீ சேவலை விட மோசமானவனாக ஆகி விடாதே! அதுவோ சகருடய நேரத்தில் விழித்து கூவ ஆரம்பித்து விடுகிறது நீயோ படுக்கையில் உறங்கிக்கோன்டு ,ருக்கிறாய்.
‘எனவே நாமும் எமது பிள்ளைகளுக்கு இதுபோன்ற உபதேசங்களை செய்வோமாக!
************************************************************
திருக்குறள்
பிள்ளைகளுக்கு தந்தையின் கடமை என்ன?
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் -67
தந்தை தன் மகனுக்குச் செய்ய வேண்டிய உதவி கற்றவர்கள் கூட்டத்தில்
முன்வரிசையில் அமரும்படி கல்வியில் மேம்படச்செய்தல்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam



No comments:
Post a Comment