Monday, May 13, 2024

தாயினும் சாலப்பரிந்து கருணை காட்டும் அல்லாஹ்வே!

12.05.2024 SUNDAY

Dhū al-Qa‘dah 03, 1445 - INDIA
Dhū al-Qa‘dah 04, 1445 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته 

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم 

அல்ஹம்துலில்லாஹ்! 

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

தாயினும் சாலப்பரிந்து கருணை காட்டும் அல்லாஹ்வே!

உன்னுடைய  சோதனையை என் உடலில் ஆக்கிவிடாதே!

நோயினால் என்னைச் சோதிக்காதே

என்னுடைய பிள்ளைகளிலும்
என் குடும்பத்திலும் என்னுடைய பொருளாதாரத்திலும் உன்னுடைய சோதனையை ஆக்கிவிடாதே!

என்னை நிர்வகிப்பவர்களாக என் மீது பொறாமை கொண்டவர்களை ஆக்கி என்னை சோதித்துவிடாதே!

என்னை வெறுப்பவர்கள் என்னுடைய வீழ்ச்சியைக்கண்டு மகிழும் நிலைக்கு என்னை ஆளாக்கிவிடாதே!

ஹலாலான வருமானங்களை நீ எனக்கு வழங்குவதின் மூலம் ஹரமானவைகளின் பக்கம் செல்லாமல் என்னைத் தடுப்பாயாக! 

வாழுகின்ற காலமெல்லாம் உனக்கும் உன்னுடைய ஹபீப் எங்களின் உயிரின் மேலான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கட்டுப் பட்டவர்களாக வாழ்ந்து அந்நிலையிலேயே ஷஹாதத் கலிமா வை மொழிந்தவர்களாக உன் பால் எங்களை அழைத்துக் கொள்வாயாக!

‎اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ‏ ،مِنْ شَرِّ مَا خَلَقَۙ‏ ،وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ‏ ،وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ‏ ،وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ 

 அ'ஊது Bபி ரBப்Bபில்-Fபலக் மின் ஷர்ரி மா கலக் வ மின் ஷர்ரி காஸிகின் இதா வகBப் வ மின் ஷர்ரின்-னFப்Fபா-தாதி Fபில் 'உகத் வ மின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்

அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
(அல்குர்ஆன் : 113:1-5)

யா அல்லாஹ்!

உன்னையையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்


Thank you whatsapp forward msg

 



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: