Tuesday, June 11, 2024

என்னுடைய ரப்பே!நீ என் மீதும், என் பெற்றோரின் மீதும் அருளியுள்ள உன்னுடைய நிஃமத்துக்கு நான் நன்றி செலுத்துவதற்கும்,


11.06.2024 TUESDAY

Dhū al-hijjah 04, 1445 - INDIA
Dhū al-hijjah 05, 1445 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته 

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم 

அல்ஹம்துலில்லாஹ்! 

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

எங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அதிகாலை நேரத்தில் தொழ
வாய்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழ் அனைத்தும்

அண்ணல் நபி அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் உன்னுடைய அருளைப் பொழிவாயாக 

யா அல்லாஹ் என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக

 என் பார்வையிலே ஒளியை ஏற்படுத்துவாயாக

எனது செவித்திறனில் ஒளியை  ஏற்படுத்துவாயாக

எனது வலது பக்கம், இடது பக்கம் ,முன் பக்கம், பின் பக்கம் அனைத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக

  எனது நரம்பில் எனது தசையில்,எனது குருதியில் 
ஒளியை ஏற்படுத்துவாயாக!

  என் உரோமத்தில்,என்மேனியில், என் நாவில்  ஒளியைஏற்படுத்துவாயாக

என் ஆத்மாவிலும்  ஒளியைக் ஏற்படுத்துவாயாக

  என் ஒளியை வலுப்பமானதாக ஆக்குவாயாக!

எனக்கு மேலே, எனக்கு கீழே ஒளியை  ஏற்படுத்தி அருள்! ரஹ்மானே 

இரட்சகனே!
மனிதர்களின் கெடுதிலிருந்தும்,
அவர்களின் தந்திரங்கலிருந்தும்,
அவர்களின் பொறாமையிலிருந்தும்
அவர்களி்ன் நெஞ்செரிச்சலிருந்தும்
அவர்களின் பழிச்சொல்லிருந்தும்
அவர்களின் சூழ்ச்சியிலிருந்தும்
அவர்களின் துன்பங்களிலிருந்தும்
எங்களைக் காப்பாயாக!

யா அல்லாஹ் !எங்களின் உள்ளத்தின் கவலைகள் ,ஆசைகள் ,எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உன்னை அல்லால் யாராலும் அறிய முடியாது !

என்ரப்பே !அவைகளை நிறைவேற்றி வைப்பாயாக
 இன்றைய நாளை எங்களின் இம்மை,மறுமைக்குபலன் தரும் நாளாக  ஆக்குவாயாக 

 எங்களின் பொறுமைக் குறைவின் காரணமாக எங்களுக்கு எந்த இழப்பையும்  செய்துவிடாதே!

நீ சங்கைக்குரியவன்! உன்னுடைய கருணை அனைத்துப் பொருட்களின் மீது பரவி இருக்கிறது!

யா அல்லாஹ்! என் மார்க்கத்தில் அதிகத்தைக் கேட்கிறோம் எங்கள் வாழ்நாளில் பரக்கத்தைக் கேட்கிறோம்

,உடலில் ஆரோக்கியத்தைக் கேட்கிறோம்,

எங்கள் ரிஜ்கில் விசாலத்தைக்கேட்கிறோம்

எங்களின் மவ்த்திற்கு முன் பாவமன்னிப்பையும்,மவ்த்திற்கு முன் ஷஹாதத் கலிமாவை மொழிவதையும்,மவ்திற்குப்பின் உன்னுடைய மன்னிப்பையும்,கேள்விகணக்கு நேரத்தில் மன்னிப்பையும்,தண்டனையிலிருந்து பாதுகாப்பையும்,சொர்க்கத்தின் பாக்கியத்தையும் கேட்கிறோம்.

உன்னுடைய கண்ணியமான முகத்தைப்பார்க்கும் பாக்கியத்தை அருள்வாயாக

என்னுடைய ரப்பே!நீ என் மீதும், என் பெற்றோரின் மீதும் அருளியுள்ள உன்னுடைய நிஃமத்துக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், எதனை நீ பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயலை நான் செய்வதற்கும் எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக் குவாயாக! என சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! 

 நான் உன் பால் தவ்பா செய்து மீள் பவனாக என்னை ஆக்குவாயாக .

 எங்கள் ரப்பே!எங்களுக்கு நீ நேர்வழி காண்பித்த பின் எங்கள் உள்ளங்களை வேறு வழியில் திருப்பி விடாதே.உனது அருளை அன்பளிப்பாக எங்களுக்கு அளிப்பாயாக .

.ரப்பே!நிச்சயமாக உன் மீதே ஈமான் கொண்டோம்.எனவே எங்கள் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக.நரக வேதனையை விட்டு எங்களைக் காத்தருள்வாயாக 
எங்களின் துஆவை ஏற்றுக்கொள்வாயாக!

யா அல்லாஹ்!

உன்னையையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆமீன்


Thank you 
whasapp forward msg


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: