Wednesday, October 1, 2014

அரஃபா நோன்பு






"அரஃபா நோன்பு " நோன்பு பெருநாள் , ரமலான் மாதம் நோற்கும் 30 நோன்புகளுக்கு அடுத்து தியாக திருநாளான ஹஜ் பெருநாளுக்கு பிறை ஒன்பதில் பிடிக்கவேண்டும் மகத்துவமான நோன்பாகும். இந்த நோன்பு வைத்தால் போனவருடத்தின் முன் செய்த சிறிய பாவங்களும், இனி வருகிற வருடத்தில் பின் செய்த பாவங்களும் மன்னிக்கப்படும். என்று என் கிரான்மா சிறு வயதில் எனக்கு சொல்லி கேட்டு இருக்கிறேன்.

ஹஜ்ஜிக்கு செல்லாத உலகத்தில் உள்ள எல்லா நாடுகளில் வாழும் முஸ்லீமான ஆண் பெண்கள் அனைவருக்கும் இது கடமையாகும்.
நோன்பு பிடிக்க முடிந்தவர்கள் அரஃபா நோன்பை நோற்று அல்லாவிடம் நீங்கள் செய்த பிழைகளுக்கு மன்னிப்பு கேளுங்கள்.

======='
அரஃபா நாளில் ஓதும் துஆ
Thanks Kaheeja
-------

ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் 'அரஃபா நோன்பு' என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.

இந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.

அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 
                   துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                         நூல்:முஸ்லிம்(2151)

இந்த அரஃபா நோன்பை, அவ்வருடம் யார் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் நோற்கவேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.

அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.              
                       நூல்: இப்னுமாஜா(1722)

மேலும் இதை விளக்கமாக தெரிந்து கொள்ள சகோதரி அஸ்மாவின் வலைதளத்தை பார்க்கவும்.

நன்றி அஸ்மா

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: