Tuesday, February 1, 2022

Dua காலை, மாலை Dua


 

السلام عليكم ورحمه الله وبركاته.

நன்மைக்கு நினைவூட்டல்.

தூங்கி எழுந்தவுடன் ஓத வேண்டிய துஆ

 

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ

 

பொருள் : எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

 

 

 

  நபிகள் நாயகம் (ஸல்)காலையில் பஜ்ர் தொழுகைக்கு எழுந்ததும் ஓதிய  துஆ.👇🏻

 

اَللّٰهُمَّ اجْعَلْ فِيْ قَلْبِيْ نُوْرًا وَفِيْ بَصَرِيْ نُوْرًا وَفِيْ سَمْعِيْ نُوْرًا وَعَنْ يَمِينِيْ نُوْرًا وَعَنْ يَسَارِيْ نُوْرًا وَفَوْقِيْ نُوْرًا وَتَحْتِيْ نُوْرًا وَأَمَامِيْ نُوْرًا وَخَلْفِيْ نُوْرًا وَاجْعَلْ لِيْ نُوْرًا

 

 

🌹பொருள் :

இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து!

எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து!

 புகாரி _6316

 

 

  

🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄

 

காலையிலும்,

மாலையிலும்

சூரா

அந்நாஸ்,

ஃபலக்,

இஃக்லாஸ்_

ஆகிய_3⃣

அத்தியாயங்களை

3⃣ தடவை ஓதினால்

அதுவே அனைத்து_

காரியங்களுக்காகவும்  ஒருவருக்குப்

போதுமானது என

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்

 

🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄

 

நபி

(ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன்   ஒதிய துஆக்கள்.

 

 

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ولَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذَا الْيَوْمِ وَخَيْرَ مَا بَعْدَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهُ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ

 

🌹பொருள் :

 

 அல்லாஹ்வின் கிருபையால் நாம் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். ஆட்சியும் அல்லாஹ்வுக்கே! புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே! வணங்கப்படுபவன் அல்லாஹ்வைத் தவிர (வேறு) இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. அவனுக்கே ஆட்சி உரியது. அவனுக்கே எல்லா புகழும் உரியது. அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். என் இரட்சகா! இந்நாளின் நன்மை மற்றும் இ(ந்நாளான)தற்கு பிறகுள்ள நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன். இன்னும் இந்நாளில் ஏற்படும் தீமை மற்றும் இ(ந்நாளான)தற்கு பிறகுள்ள தீமையிலிருந்து உன்னை கொண்டு நான் காவல் தேடுகிறேன். என் இரட்சகா! நரகத்தில் உள்ள வேதனை மற்றும் கப்ரில் உள்ள வேதனையிலிருந்து உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்.

 

முஸ்லிம்-5268.

 

🍄🍄🍄🍄

 

 

 

காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.

آللّٰهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

🌹பொருள்.

 

இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.

 

ஆதாரம்; அஹ்மத்_49.,60,77.

 

🍄🍄🍄🍄🍄🍄🍄

سٓيٌٓدِ الْاِسْتِغْفٓارْ_.புகாரி-6306

 

பாவமன்னிப்பு கோருவதில் மிகவும் சிறந்த துஆ

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ.

 

🌹பொருள் :

 

இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுக…




 


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: