Thursday, April 1, 2021

ஆணுக்குச் சில அறிவுரைகள்!

ஆணுக்குச்  சில   அறிவுரைகள்!

🌷♻️🌷

அஹ்மத் பின் ஹம்பல் என்ற ஒரு மகான் தனது மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.

பிறகு மகனுக்குச் சில அறிவுரைகளைக் கூறினார்கள்:

“மகனே!  சில நடைமுறைகளை நீ கடைப்பிடித்தால், நீயும் உனது மனைவியும் இன்பமாக வாழலாம்!”

♻️ 

“மகனே, பெண்கள் அன்பை விரும்பக் கூடியவர்கள். எனவே உன் அன்பை மனைவிக்கு நீ வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.”

“அன்பைக் கொடுப்பதில், ஒருநாளும் நீ கஞ்சனாக இருக்காதே.”

♻️

இரண்டாவதாகக் கூறினார்கள்:

“கடின குணமுள்ள ஆண்களைப் பெண்கள் வெறுப்பார்கள். மிருதுவான குணமுள்ள ஆண்களையே பெண்கள் விரும்புவார்கள்.”

“ஆகவே, மனைவியுடைய உள்ளத்தை அடைவதற்கு, அவளிடம் மிருதுவாக நடந்துகொள்.”

♻️

“கணவனிடம்: அன்பான பேச்சையும், அழகான தோற்றத்தையும், பரிசுத்த ஆடையையும், மனைவி எதிர்பார்ப்பாள்.”

“நீ வீட்டில் இருக்கும்போது:
-உனது ஆடையையும், 
-உனது பேச்சையும், 
-உனது  தோற்றத்தையும், அழகாக வைத்துக் கொள்,” என்றார்கள்.

♻️

நான்காவதாகச்  சொன்னார்கள்.

“உனது மனைவி உன் வீட்டில் அரசியாக இருப்பதற்கு விரும்புவாள். ஆகவே, அவளை நீ அரசியாக ஆக்கி விடு. நீ சந்தோஷமாக வாழ்வாய்!”

♻️

மேலும் சொன்னார்கள்:

“பெண்கள் கணவர் உழைப்பதை விரும்புவார்கள். எனவே நீ சம்பாதித்து அவளுக்குக் கொடுத்து, அவளை நல்ல முறையில் வாழவைக்க வேண்டும்.”

“அதே சமயம், தாய்-தந்தையர் மற்றும் உனது
குடும்பத்தையும் கவனிக்க வேண்டும்.”

♻️

அடுத்துச் சொன்னார்கள்:

“பெண்கள் வளைந்த விலா எலும்பில் இருந்து படைக்கப்பட்டவள். அதுதான் அவளின் அழகின் இரகசியம்.”

“வளைந்தவள் என்பதற்காக  அவளை நேராக்க முயற்சிக்காதே!”

“மனைவியோடு நீயும் வளைந்து கொடுத்தால், உங்களது வாழ்க்கை  நேராகி விடும் !
-மகிழ்ச்சியாகி விடும்!” 

♻️

பிறகு சொன்னார்கள்:

“மனைவியிடம் ஒரு குறையை நீ கண்டால், அதற்காக அவளை வெறுத்து விடாதே.”

“உனக்குத் தெரியாத பல நற்பண்புகள் மனைவியிடம் இருக்கும். மனைவியின் நடத்தையை ஆழ்ந்து அமைதியாகச் சிந்திந்தால், மனைவியின் நற்குணங்களை நாள்தோறும் நீ கண்டு கொள்வாய்!”

♻️

மேலும் கூறினார்கள்:

“பெண் உடலால் பலகீனமானவள்.”

“அவளுடைய மாத விடாய் நாட்களிலும் மற்றும் பிள்ளை பெற்ற பின் இரண்டு மூன்று மாதங்களுக்கும், (எல்லோரின் மீதும் கடமையான) தொழுகை மற்றும் நோன்பு வைப்பது ஆகிய கடமைகளை அவள் அனுஷ்டிக்க வேண்டியதில்லை.”

“அத்தகைய நேரங்களில், தொழுகையையும், நோன்பையும் விட்டு விடுவது, பெண்களுக்கு இறைவன் அளித்த சலுகை ஆகும்.”

“அந்த நாட்களில், பெண்களுக்குக் கடமைகளை இறைவன் குறைத்தது போன்று, அந்த நாட்களில், உன் தேவைகளைக் குறைத்து, மனைவியின் வேலைப் பளுவையும் குறைத்து விடு!”

♻️

கடைசியாகச் சொன்னார்கள் :

“மனைவி உன் பாதுகாப்பில் வந்தவர். தனது பாதுகாப்பில் வந்தவரை நன்கு உபசரித்துப் பராமரிப்பது, ஒரு மனிதரின் பொறுப்பாகும்.”

“அவ்வாறு வந்த மனைவியின் மீது நீ எப்போதுமே கருணையுடன் நடந்து கொண்டால், இறைவனின் கருணை உன் மீது பொழியப்படும்!”

ஏனெனில்:

“பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் (இறைவன்) உங்கள் மீது கருணை காட்டுவான்,” என்று நபிகள் நாயகம் கூறி இருக்கிறார்கள்.

♻️

“இந்த விஷயங்களைக் கடைபிடித்து நடந்து வந்தால், உனது வாழ்க்கையையும், உனது மனைவியின் வாழ்க்கையையும்,  மகிழ்ச்சி பொங்கும் வாழ்வாக, இறைவன் ஆக்கி விடுவான்.”

🙏🏼🙏🏼🙏🏼



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: