Sunday, October 24, 2010

உம்ரா ஹஜ் செல்ல போகிறீர்களா? குழந்தைகள் ஜாக்கிரதை




இந்தியாவிலிருந்து சில பேர் கணவன் மனைவி என்று செல்கிறார்கள், சில ஊர்களில் பிள்ளைகளயும் அழைத்து செல்கிறார்கள், குடும்பத்துடன் ஹஜ் செய்பவர்களுக்கும் உண்டு. வெளிநாடுகளில் இருந்து போகிறவர்கள், குழந்தைகளையும் உடன் அழைத்து சொல்கிறார்கள்.

அப்படி போகும் போது குழந்தைகளை ஜாக்கிரதையாக பிடித்து கொள்ளுங்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தில் விட்டால் மறுபடி தேடி கண்டு பிடிப்பது ரொம்ப சிரமம்,அவர்கள் டிரெஸில் போன் நம்பர், பெயரை கூட ஒரு பேப்பரில் எழுதி பின் குத்தி வைக்கலாம்.


மெயினா பிள்ளைகளை கூப்பிட்டு போகிறவர்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்ளுங்கள். பச்ச குழந்தை என்றால் உங்களுடன் அவர்களை ஏதாவது கயிறுடன் கட்டி கொள்ளுங்கள். என்ன பிள்ளைய கட்டி போடுவதா என்று யோசிக்க வேண்டாம்.




நான் உம்ரா சென்றிருந்த போது அங்கு ஒரு அரபி பெண் தன் காலுடன், அந்த குழந்தை காலை கட்டி போட்டு விட்டு தொழுது கொண்டு இருந்தாங்க. பிள்ளை எங்காவது போய் விடுமே என்ற கவலை இல்லை, இன்னொரு பிள்ளை அப்ப அப்பா ஓடி கொண்டு அதை பிடிப்பதே பெரிய வேலையா போச்சு, இரண்டு மூன்று முறை கூட்டத்தில் காணபோச்சு வேறயாம்.இருக்கலாம்.





இன்னும் ஒன்று அங்கு திருடு ஜாஸ்தி, பிச்சைகாரர்கள் அதிகம்.அங்கு செல்பவர்கள் தவற விடும் குழந்தைகளின் கைய கால வெட்டி கண்ணை நோண்டி பிச்ச எடுக்க விட்டு விடுகிறார்கள், பார்க்க பரிதாபமாய் அந்த குழந்தைகள் ரோட்டில் படுத்து உருண்டு பிச்சை எடுக்கிறார்கள்.அவர்களுக்கு நீங்கள் போடும் பணம் கூட அவர்களை சென்றடைவதில்லை,பிச்சை எடுக்க விடுபவர்கள் வாங்கி கொள்வார்கள்.

ஆகையால் அதுபோல் பார்க்கும் போது அவர்களுக்கு பணமா கொடுக்காமல் சாப்பிட சாப்பாடா கொடுத்தால் அந்த குழந்தைகளுக்கு போய் சேரும்.
http://syednavas.blogspot.com/2009/06/blog-post_11.html


இந்த‌ ப‌திவையும் ப‌டிக்க‌வும்.

அங்கு பிச்சை எடுக்கும் பிள்ளைக‌ள் அந்த‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர் இல்லை.இங்கு த‌வ‌ற‌விட்டு செல்லும் பிள்ளைக‌ளாம்.எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார் அவருடன் வேலை பார்ப்பவர்.ஒரு முறை ஹ‌ஜ் போன‌ போது கூட்ட‌த்தில் தொலைத்து விட்டு அவ‌ர்க‌ள் எங்கு தேடியும் கிடைக்காம‌ல். நாடு திரும்பி விட்டார்க‌ள்.இத‌ற்காக‌வே அவ‌ர்க‌ள் வ‌ருடா வ‌ருட‌ம் ஹ‌ஜ் சென்று தேடினார்க‌ளாம்.க‌டைசியில் ஐந்தாவ‌து வ‌ருட‌ம் அந்த‌ விட்டு சென்ற‌ பிள்ளையை க‌ண்டெடுத்தார்க‌ள் அய்யோ என்னால் சொல்ல‌ முடிய‌லையே இந்த‌ கொடுமையை, கை துண்டிக்க‌ ப‌ட்டு ந‌ல்ல‌ அழ‌காக‌ இருந்த‌ பிளளை ரோட்டில் போட்டு பிச்சை எடுக்க‌ விட்ட‌தால் க‌ருத்து அந்த‌ க‌ருபின‌ ஆட்க‌ள் போல‌ வே ஆகிவிட்ட‌தாம், எப்ப‌டியே வாத‌டி அந்த‌ க‌வர்ன்மென்ட்டில்போய் வாதாடி பிள்ளை மீட்டு வ‌ந்த்தார்க‌ளாம்..யார்



ஹஜ் உம்ரா சென்றாலும் பத்து முறை தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்புங்கள்.குழந்தைகளை உஷாரா பிடிக்கும் படி சொல்லி அனுப்புங்கள்.








2 comments:

தளிகா said...

அக்கா ஒரு கணம் யோசித்தேன் நடுக்கமா இருக்கு..பேபி ஷாப்களில் குழந்தைகளுக்கான லீஷ்(leash) கிடைக்கும் அதனை வாங்கி கட்டிக் கொள்ளலாம்.
நம் காலில் ஒரு முனையும் அவர்கள் இடுப்பில் ஒரு முனையும் கட்டினால் அவர்களுக்கு இறுக்கமா தெரியாது

Jaleela Kamal said...

தளி வாஙக் வருகைக்கு மிக்க நன்றீ

நீங்கள் சொல்வது போலும் செய்யலாம் நல்ல ஐடியா.