என் அருமை தந்தை நல்ல படியாக ஆரோக்கியமாக தான் இருந்தார் இந்த முன்று மாதத்தில் என்னன்னவோ நடந்து முடிந்து விட்டது.ஏன் இப்படி தீடீருன்னு ஆச்சுன்னே புரியலையே.
ஏற்கனவே சவுதியில் வேலை பார்க்கும் போது இரவு ஸ்டோரில் எண்ணை தடுக்கி கீழே விழுந்து இடுப்பில் ஸ்டீல் வைத்து ஆப்ரேஷன் செய்து நல்ல ஆக்கிவிட்டது/
இப்ப தொழ போகும் போது இரண்டு தடவை கீழே விழுந்து இருக்கிறார். தீடீரென கால் நடக்க முடியல் நிற்க முடியல.உடனே ஹாஸ்பிட்டலில் சேர்த்து மறுபடி அந்த ஸ்டீல் கழண்டு விட்டதால் பழைய ஸ்டீலை எடுத்து விட்டு புதுசா மாற்றி அமைத்து ஆப்ரேஷன் நல்ல விதமாக முடிந்தது.
ஆனால் அதற்கு பிறகும் எழுந்திருக்க முடியவில்லை பிஸியோ தரபியின் உதவில் நிற்க மட்டும் வைத்தார்கள், இனி ஆறு மாதத்திற்குள் நடந்துடுவார் என்றார்கள்.
ஆனால் தீடீரென்று சுகரின் அளவு அதிகமாகி , உடலில் இரத்த்தின் அளவு கம்மியாகி ஒன்றும் சரியாக சாப்பிடாமல் இருந்தார்கள், நல்ல பேசி கொண்டு இருந்தார்கள், இப்படி தீடீரென்று எங்களை விட்டு பிரிவார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கல. அம்மா மிகவும் நம்பிக்கையோ சடையாமல் பணிவடை செய்தார்கள், ஆனால் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியே.
சகோதர சகோதிரிகளே துஆ செய்யுங்கள்,இன்றோடு என் தந்தை எங்களை பிரிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது.
எப்போதும் திக்ரில் இருப்பார் குளிக்கவைத்து வைத்து இருக்கும் போது அவர் கை திக்ர் செய்வது போல் தான் அவர் விரல் இருந்தது.
எவ்வள்வு ஆற்றி கொண்டாலும் முடியலையே எங்க எல்லோருக்கும் பெரும் இழப்பா இருக்கே. எங்க எல்லோராலும் தாங்க முடியலையே, எல்லோரும் தாங்கி கொள்ளும் சக்தியயையும் மன ஆறுதலையும் தா.. யா அல்லாஹ்
அவர் செய்த தவறுகளை மன்னித்து மறுமையில் சுவர்கத்தில் நல்லோருகளுடன் சேர்த்து வைப்பாயாக யா அல்லாஹ்.


2 comments:
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
தங்களின் தகப்பனார் வாழ்வில் செய்த தவறுகளை மன்னித்து இறைவன் அவர்களுக்கு சுவனபதியை கொடுக்க பிரார்த்திக்கும் சகோதரன்
சுவனப்பிரியன்.
ஸலாம்
அல்லாஹ் பொறுமையைத் தருவானாக. ஆமீன்
Post a Comment