1. "யாஅல்லாஹ் இயலாமை,சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம், மண்ணறை வேதனை, வாழ்க்கையில் ஏற்படும் சோதனை ஆகியவவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." என்று நபி (ஸல்) அவர்கள் அல்லஹ்விடம் இறைஞ்சினார்கள்".
2. "யா அல்லாஹ்! நேர்வழியையும் (உனது) அச்சத்தையும், கற்பொழுக்கத்தையும் (பிறரிடம்) தேவையற்ற நிலையையும் உன்னிடம் கேட்கிறேன்."
3. யா அல்லாஹ்! நான் உன் அருளையே ஆதரவு வைத்துள்ளேன்; (அதனை) கண் மூடித் திறக்கும் அளவிற்குக் கூட (நிறுத்தி) எனது உள்ளத்தை ஏங்க வைத்து விடாதே!மேலும் என் அனைத்துக் காரியங்களையும் சீர்படுத்தி வைப்பாயாக! வணக்கத்துக்குரியவன் உன்னைத் தவிர வேறு எவருமிலர்!"
4. "யா அல்லாஹ் உள்ளங்களைத் திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உன் வழிபாட்டின் பக்கம் திருப்புவாயாக!"
5."உள்ளங்களைப் புரட்டுபவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்து நிற்கச் செய்வாயாக!"
6. "யா அல்லாஹ்! இவ்வுலகிலும் மறு உலகிலும் உன்னிடம் நல்லதைக் கேட்கிறேன்"
7. "யா அல்லாஹ் என்னுடைய செவியின் தீங்கை விட்டும்,பார்வையின் தீங்கை விட்டும், நாவின் தீங்கைவிட்டும், உள்ளத்தின் தீங்கை விட்டும், எண்ணத்தின் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்."
8. "யா அல்லாஹ்! வெண்குஷ்டம்,பைத்தியம்,உடலுருப்புகள் அழுகிவிழும் நோயை, மற்றும் பிறதீய நோய்கள் ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
9."யா அல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன்; கண்ணியத்துக்குரியவன்;மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக!"
10. "யா அல்லாஹ்! உன்னுடைய தயாளத் தன்மையிலிருந்தும் உன்னுடைய அருளிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். ஏனெனில் இவற்றை உன்னைத் தவிர வேறு எவரும் சொந்தம் கொள்ள முடியாது.
11."யா அல்லாஹ்!உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இறப்பதை விட்டும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் உன்னுடைய பாதையில் (போர் செய்யும் போது) புறமுதுகு காட்டி ஓடி இறபப்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்."
12."இறைவா! வறுமை, ஏழ்மை,இழிவு ஆகியவற்றை விட்டும், நான் பிறருக்கு அநீதம் செய்வதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் அண்டை வீட்டார் திசை மாறச் செய்து விடுவார்கள்."
13.யா அல்லாஹ்! (உனக்கு) அஞ்சாத உள்ளம், ஏற்று கொள்ளபடாத பிராத்தனை, நிறைவடையாத மனம், பயனளிக்காத கல்வி ஆகிய இந்த நான்கு தன்மைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகீறேன்."
14. "யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவனப்பதியை கேட்கிறேன். மேலும் எரி நரகை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்."
15. "இறைவா! எனக்கு மார்க்க விளக்கத்தைத் தருவாயாக.!"
16. " யா அல்லாஹ்! நான் அறிந்து கொண்டே உனக்கு இணை வைப்பதை விட்டும் நிச்சயமாக நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.நான் அறியாமல் செய்தவற்றிற்காக உன்னிடம் பாவ மன்னிப்பு கேட்கிறேன்."
17. "யா அல்லாஹ் பயனளிக்கும் கல்வியையும் தூய்மையான (ஹலாலான) உணவையும், ஏற்றுக் கொள்ளப்படும் நல்லறங்களையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்."
18."யா அல்லாஹ்! நீ எனக்கு அளித்த அருட்கொடைகளை எனக்குப் போதுமானதாக்கி, அதில் எனக்கு அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! என்னை விட்டும் நீங்கிவிடும் அருட்கொடைகளுக்குப் பகரமாக அதை விட சிறந்தவற்றை எனக்கு வழங்குவாயாக!"
19."யா அல்லாஹ்! என்னை (மறுமையில்) மிகவும் எளிதாக விசாரணை செய்வாயாக!
எல்லாம் வல்ல ரஹ்மான் நாம் கேட்கும் பிராத்தனைகளை ஏற்று நம் அனைவர் மீதும் தன் பேரருளைச் சொரிவானக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்.
(இந்த தூஆ அல் ஜன்னத் பதிப்பு 2002 வில் எனக்கு கிடைத்தது, பத்திர படுத்தி வைத்தது , அவை அனைத்தையும் எடுத்து கோர்வையாக இங்கு போட்டு உள்ளேன்.)
12 comments:
ரொம்ப அருமையான பதிவு சகோதரி. தொடரட்டும் உங்கள் பணி இன்ஷா அல்லாஹ்.
தலைப்பில் நபி (ஸல்) அவர்கள் என்று போட்டுவிடுங்கள்.
சகோதரர் நாவஸ் அவர்களுக்கு,
தவற்றினை சுட்டி காண்பித்ததற்கு மிக்க நன்றி. இந்த பதிவை தான் முதலில் போட இந்த தூஆ பிளாக்கே ஆரம்பித்தேன்.
நிறைய பேருக்கு தூஆ கேட்கும் முறை தெரியாது (எனக்கும் தான்) இந்த புக்கை ஒரு இடத்தில் பார்த்தேன், அதில் இருந்த இந்த தூஆக்கள் ரொம்ப நல்ல இருந்தது , இன்னும் மீதி இருக்கு முடிந்த போது போடுகிறேன்.
மிகவும் பயனுள்ள துஆக்கள் சகோதரி.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி !
எல்லாம்வல்ல இறைவன் உங்களுக்கும், எனக்கும், அனைவருக்கும் அருள்புரிவானாக ! ஆமின் !
அஸ்ஸலமு அலைக்கும்
மிக அருமையான் துஆ. தொடருங்கள்
சகோதரர் எம்.ரிஷான் ஷரீப் ,
உங்கள் வருகைக்கும் மிக்க நன்றி.
கதிஜத் வா அலைக்கும் அஸ்ஸலாம்
ஒதி விட்டு பதில் அளித்தமைக்கு நன்றி
மிக்க பயனுள்ள துஆக்கள், தொடருட்டும் உங்கள் சேவை!! MAY ALLAH BLESS YOU!!
ஜலீலா ,இந்த துவா பற்றிய ப்ளாகை சுமஜ்லா ப்ளாக் மூலமாக தெரிந்துகொண்டேன்.வேறு என்னென்ன ப்ளாக் வைத்துள்ளீர்கள்,தெரிவித்தால் எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது பார்க்க வசதியாக இருக்கும்.இந்த ப்ளாக் மிக்க பயன் உள்ளது.அருமை.
உங்கள் பதிவுகள் நல்ல பயனுள்ளதாக இருக்கிறது
தொடரட்டும் உங்கள் பணி
Mihavum nallaa use fulla irukku
Assalamu Aalaikum! dear sister!
I want be added my small blog in your great blog .Allah bless you!
islam-bdmhaja.blogspot.com
if you want copy any islam news in mine , you can do it ! jazakallahu khairen!
Post a Comment