
முஹர்ரம் மாதம் அல்லாஹ்வினிடத்தில் தனிச்சிறப்பு பெற்ற மாதமாகும்.
அம்மாதத்தில் ஒரு சமூகத்தாரின் பச்சாதாபம் அங்கீகரிப்பட்டது. எவரொருவர் பிழை பொறுக்கத் தேடுகிறாரோ அவர் பிழை பொறுகக்ப் பெறுவார். என்ற அருளுரையை நபி பெருமானார் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு ஹழ்லரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
துல் ஹஜ்ஜூ மாதத்தின் இறுதி நாளிலும் முஹர்ரம் மாதத்தின் முதல் நாளிலும் நோன்பிருந்தவர்முந்திய முழு ஆண்டின் நோன்பையும் முடித்து மறு ஆண்டின் நோன்புகளைத் துவக்கிவிட்டார். அவருடைய ஐம்பதாண்டு காலப் பாவஙக்ளுக்கான பரிகாரம் கிடைத்து விட்டது. எனப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டு ஹழ்லரத் இப்னு அப்பாஸ் ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆஷூரா நாள் அருள் நிறைந்த திருநாள்.
முஹர்ரம் மாதத்தின் முதல் நாளிலிருந்து எண்ணி வரும் பத்தாம் நாளே 'ஆஷூராவுடைய நாள்' என்று அழைக்கப்படுகிறது.
அரபுகளுக்கு முன்னர் சிறப்போடு வாழ்ந்த யூதர்கள் தங்கள் ஆண்டின் துவக்க மாதத்தை 'திஷ்ரீ' என்றழைத்தனர்.
ஹள்லரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் வழிவந்தவர்களான அவ்விரு சமுதாயத்தவர்களுடையவும் காலக்கணிப்பில் மாதங்களின் பெயர்கல் வெவ்வேறக இருந்த போதிலும் அவற்றின் துவக்கமும் முடிவும் ஒன்றாகவே வருவன. அவ்வகையில் அரபிகளின் முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் வந்த அன்றே யூதர்களின் 'திஷ்ரீ'மாதத்தின் பத்தாம் நாளும் வந்து கொண்டிருந்தது. எனவேதான் அது 'பத்தாம் நாள்' என்ற பொருள்பட 'யவ்முல் ஆஷூரா'என அழைக்கப்பட்டதாகக்கூறப்பட்ட போதிலும், அல்லஹ் அந்தக் குறிப்பிட்ட நாளிலேயே அடுத்தடுத்து தன் பத்து கற்பனைகளை வெளிபடுத்தியதால் அது ஆஷூரா நாள் எனப்பெயர்ப் பெற்றதாகவே மெய் நிலை கண்ட ஞானி முஹியத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மாநபியின் திருப்பேரர் (ரஹ்) அவர்கள் தங்களின் நூலில் பின்வருமாறு எழுதுகிறார்கள்.
1ஹள்லரத் ஆதம் (ரஹ்) அவர்களின் பச்சாதாபம் அந்த நாளில் தான் ஏற்க்கப்பட்டது.
2.ஹள்ரத் இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு சுவனப் பெருவாழ்வு கிடைத்தது.
3. ஆறு மாதகாலம் பிரளயத்தில் அலைகழிந்த பின்னர் ஹள்லரத் நூஹ் (அலை) அவர்களின் மரக்கலம் 'ஜூதி' மலையில் அன்றைய தினமே ஒதுங்கி நின்றது.
4.ஹள்லரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் பிறந்ததும், அல்லாஹ் அவர்களைத் தன் கலீலாக = தோழராக ஏற்றதும் நம்ரூதுடைய நெருப்புக்குண்டம் அவர்களுக்கு சுவனப்பூங்காவாக மலர்ந்ததும் அன்றேயாகும்.
5.ஹள்லரத் தாவூத் (அலை) அவர்களின் பிழை பொறுக்கப்பட்டதும் அந்த நாளிலேயேயாகும்.
6. ஹள்லரத் ஸுலைமான் (அலை) அவர்கள் இழந்த தம் ஆட்சியை அன்றைய தினமே மீண்டும் அடையப் பெற்றதும் அன்றேயாகும்.
7.சோதனை வயப்பட்ட ஹள்லரத் அய்யூப் (அலை) அவர்கள்,பிணிகளனைத்தும் நீங்கி நலம் பெற்றதும் அன்றேயகும்.
8.நைல் நதி பிலந்து பனீ இஸ்ராயில்கள் தப்பிச் செல்ல வழிவிட்டு ஃபிர் அவ்னைத் தன்னுள் விழுங்க, அல்லாஹ் ஹள்லரத் மூஸா (அலை) அவர்களுக்கு அஷூராவுடைய அந்த நாளிலேயே வெற்றியை தந்தான்.
9. கடலில் ஆழத்தில் = கடும் இருட்டில் = மீனின் வயிற்றில் நாற்பது நாட்கள் கிடந்து அழுது புலம்பிய ஹள்லரத் யூனுஸ் (அலை) மீண்டும் வெளியானதும் ஆஷூராவுடைய நாளிலேயகும்.
10. கொலையாளிகளிடமிருந்து ஹள்லரத் ஈஸா (அலை) அவர்களைக் காத்து அல்லாஹ் தன் பல் உயர்த்திக் கொண்டதும் ஆஷூராவுடைய நாளிலேயே ஆகும்.
மேற்கண்ட பத்து காரணங்களால் புனிதம் பெற்ற ஆஷூராவுடைய நாள் இஸ்லாத்துக்கு முந்திய அரபுகளால் மட்டுமன்றி யூதர்களாலும் கண்ணியப்படுத்தப்பட்டே வந்தது.
(தொடரும்)
//ஹஸ்பியல்லாஹு வனிஃமல் வகில் வனிஃமல் மவ்லா வனிஹ்மல் நஸீர்.//
மேற்கண்ட இந்த தூவை ஆஷுரா நாளில் தான் ஒதனும் என்றில்லை தினமும் ஓதி தீன் துன்யா பயன்களை பெற்றுக்கொள்ளலாம்.
ஆஷுரா நாளையில் நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள வானத்தில் அளவில் உயர்த்திய நாயனே!
ஆஷுரா நாளில் ஜூத் என்னும் மலையின் மேல் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பலை தரிபடுத்தியவனே!
ஆஷூரா நாளில் நம்ரூதுடைய நெருப்பை விட்டும் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈடேற்றம் ஆக்கியவனே!
ஆஷுரா நாளில் நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிணிகளை நீக்கியவனே!
ஆசூரா நாளில் நூன் எனும் மீனின் வயிற்றிலிருந்து நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலம் அவர்களின் கவலையை நீக்கி சந்தோஷத்தைக் கொடுத்தவனே!
ஆஷூரா நாளில் நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாவத்தை பொறுத்தவனே!
ஆஷூரா நாளில் நபி மூஸா, நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருவரின் பிராத்தனையை ஏற்றுக் கொண்டவனே!
ஆஷூரா நாளில் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் ஈஸா அலைஹிஸ்ஸலம் அவர்களை வானத்தளவில் உயர்த்தியவனே!
ஆஷூரா நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு உதவி செய்தவனே!
ஆஷூரா நாளில் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்தவனே!
ஆஷூரா நாளில் ஜிப்ரீல், மீகாயில் இஸ்ராயில் , இஜ்ராயீல் அலைஹிமுஸ்ஸலாம் அவர்களை படைத்தவனே!
ஆஷூரா நாளில் சூரியன், சந்திரன் , நட்சத்திரங்களையும் படைத்தவனே!
ஆஷூரா நாளில் ஏழு வானங்களையும், ஏழு பூமிகளையும் படைத்தவனே!
4 comments:
மாஷா அல்லாஹ். நன்மையை அள்ளிகிட்டு போறீங்க. நல்ல பகிர்வு.
நவாஸ் ஊக்கம் தந்து இத்தனை பதிவு போட வைத்தது நீங்கள் தான் உங்களுக்கும் இதில் பங்குண்டு.
சரியான நேரத்தில தேவையான தகவல். இன்ஷா அல்லாஹ் நாளை ஆஷூரா நோண்பு வைக்கலாம் என இருக்கின்றேன்.
ஷபி
நோன்பு வையுங்கள். ரொம்ப நல்லது. 9, 10 பிடிக்கனும், இங்கு இன்று 9, நானும் நோன்பு தான்.இன்ஷா அல்லா நாளைக்கும் வைக்க இருகிறேன்.
Post a Comment