Monday, October 17, 2011

ஹாஜிகளுக்குமுக்கிய அறிவுரைகள்!

அஸ்ஸலாமு அலைக்கும்,,,
ஹாஜிகளுக்குமுக்கிய அறிவுரைகள்!
உம்ராவையும், ஹஜ்ஜையும் நிறைவோற்றுவோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய
விதிகள், ருக்னுகள் (ஃபர்ளுகள்) வாஜிபுகள் ( கடமைகள்) ஆகியற்றை முதலில் மனதில் பதிய
வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் இவற்றைத் தெரிந்து கொள்ளாமலும் புரிந்து
கொள்ளாமலும் ஹஜ்ஜை நிறைவேற்றி தமது கடமைகளை பாழ்படுத்திவிடும் பரிதாபகரமான நிலையைக்
காணமுடிகிறது.
அ. ஹஜ்ஜின் நிபந்தனைகள்-6.
1. முஸ்லிமாக இருத்தல் 2. புத்தி சுவாதீனமாக இருத்தல் 3. சுதந்திரமானவனாக இருத்தல்.
(
அதாவது அடிமையாக இல்லாதிருத்தல்) 4. பருவ வயதை அடைந்திருத்தல் 5. உடல்
வலிமையும்,பண வலிமையும் பெற்றிருத்தல் 6. ஒரு பெண் மஹ்ரமுடன்(பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டவருடன்) ஹஜ்ஜு செய்தல்.
உம்ராவின்; ருக்னுகள் (ஃபர்ளுகள்) -3
1. இஹ்ராம் கட்டுவது
2.
கஃபாவை தவாஃப் செய்வது.
3.
ஸஃபா, மர்வாவுக்கிடையே ஸஃயீ செய்வது (ஓடுவது)
இவற்றுள் ஏதேனும் ஒன்றை விட்டாலும் உம்ரா நிறைவேறாது. மீண்டும் நிறைவேற்றவேண்டும்.
உம்ராவின்; வாஜிபுகள் -2
1.மீக்காத்து எல்லையிலிருந்து இஹ்ராம் கட்டுவது.
2.
ஸயீ முடிந்ததும் தலை முடியைச் சிரைப்பது அல்லது முழுவதும் வெட்டுவது. (வெட்டுவது
என்பது தலையில் சில முடிகளையோ, பகுதிகளையோ வெட்டுவதல்ல.முழுமையாக வெட்டுவது)
இவற்றுள் ஏதேனும் ஒன்று விடுபட்டு விட்டால் பிராயச் சித்தமாக மக்கா ஹரமுடைய
எல்லையில் தமு கொடுக்க வேண்டும். இதன் மூலம் உம்ரா நிறை வேறிவிடும்.
(‘தமு’ என்பது மிருக பலியோ ஆறு ஏழைகளுக்கு உணவளிக்கவோ மூன்று நாட்களக்கு நோன்பு
நோற்கவோ செய்வதற்குச் சொல்லப்படும்)
ஹஜ்ஜின் ருக்னுகள் (ஃபர்ளுகள்) -4
1.இஹ்ராம் கட்டுவது.
2.
அரஃபாவில் தங்குவது.
3.
தவாஃப் இஃபாளா செய்வது.
4.
ஸஃபா மர்வாவுக்கிடையே ஸஃயீ செய்வது.
இவற்றுள் ஏதேனும் ஒன்றை விட்டாலும் ஹஜ்ஜு நிறைவேறாது.
ஹஜ்ஜின் வாஜிபுகள் -7
1 மீக்காத்து எல்லையிலிருந்து இஹ்ராம் கட்டுவது.
2.
சூரியன் மறைவது (அஸ்தமனம்) வரை அரஃபாவில் தங்குவது.
3.
முஸ்தலிஃபாவில் இரவு தங்குவது.
4.
அய்யாமுத்தஷ;;ரீக்குடைய நாட்களில் (பிறை 11,12,13) மினாவில் தங்குவது.
5.
மூன்று ஜம்ராக்களிலும்; கல் எறிவது .
6.
தலை முடியைச் சிரைப்பது அல்லது (முழுவதும்) வெட்டுவது.
7.
தவாபுல் விதாஃ (பயண தவாஃப்) செய்வது.
இவற்றுள் ஏதேனும் ஒன்று விடுபட்டு விட்டால் பிராயச் சித்தமாக மக்கா எல்கை;குள் தமு
கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஹஜ்ஜு நிறை வேறிவிடும்.
(தமு என்பது மிருக பலியோ ஆறு ஏழைகளுக்கு உணவளிக்கவோ மூன்று
நாட்களக்கு நோன்பு நோற்கவோ செய்வதற்குச் சொல்லப்படும்)
அ.ஹஜ்ஜு , உம்ராவுக்குரிய முக்கிய விதிகள்
1.இக்லாஸ் (தூய எண்ணத்தோடு நிறைவேற்றுவது..அதாவது அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை அல்லது
உம்ராவை நிறைவேற்றுவதாக (இக்லாஸ்) தூய்மையான எண்ணத்தோடு நிய்யத் வைப்பது.
பெயர்,புகழ், விளம்பரத்திற்காக நிறைவேற்றினால் ஹஜ்ஜு, உம்ரா கூடாது.
நபி (ஸல்) அவர்கள் ‘முகஸ்துதியும் புகழும் இல்லாத ஹஜ்ஜாக எங்கள் ஹஜ்ஜை
ஆக்கியருள்வாயாக!’ என்று தமது ஹஜ்ஜத்துல் வதாவில் துஆச் செய்தார்கள்.
2. நபி(ஸல்) அவர்கள் காட்டிய முறையில் ஹஜ்ஜு செய்வது.
ஹஜ்ஜு சம்பந்தமான சட்டங்களை சரியான முறையில் தெரிந்து நபி (ஸல்) காட்டிய முறைப்படி
செய்வது. இதில் தம் விருப்பப்படி செய்ய எவருக்கும் அனுமதி கிடையாது. நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்:-
‘குதூ அன்னீ மனாஸிக்ககும்’ ஹஜ்ஜு உம்ரா வணக்க வழிபாடுகளை என்னிடமிருந்தே தெரிந்து
கொள்ளுங்கள். (நான் செய்தவாறே நிறைவேற்றுங்கள்).(முஸ்லிம், அபூதாவூது)
ஆ.ஹஜ்ஜை நிறைவேற்றுமுன் இதய பூர்வமாக பாவ மன்னிப்புக் கோருவது.
தவ்பாவின் நிபந்தனைகள் நான்கு :-
1.
செய்து வந்த பாவங்களை முற்றிலுமாக விடுதல் (2) அதற்காக மனமுருகுதல் (3) மீண்டும்
அப்பாவங்களை செய்யவோ எண்ணவோ கூடாது என மன உறுதி கொள்ளல்.(4)
பிறருக்குச்செலுத்தவேண்டிய (ஹக்குகளை) பாத்தியதைகளை உரியவர்களிடம் சேர்பித்தல். (அதாவது:
பிறருக்குச் செலுத்தவேண்டிய ஹக்குகளை (கடமைகளை) நிறைவேற்றுவதும், அநியமாக
அபகரிக்கப்பட்ட பொருட்களை உரியவரிடம் ஒப்படைப்பதும் கடன்களை வாங்கியவரிடம்
திருப்பிக் கொடுப்பதும் அதற்காக சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்புக்கோருவதும் ஹஜ்ஜு
ஏற்கப்படுவதற்குpய விதிகளாகும். (இவை நான்கும் தவ்பா ஏற்றுக்கொள்வதற்குரிய
விதிகளாகும்.)
2. பெற்றோரின் திருப்தியைப்பெறுவதும் மனைவி கணவரின் அனுமதியைப் பெறுவதும் மிகவும்
இன்றியமையாததாகும்.
3. ஹஜ்ஜுக்குரிய செலவுகள் யாவும் ஹலாலான முறையில் ஈட்டியதாக இருக்க வேண்டும்.
4.
வஸிய்யத் ஏதும் செய்வதாயின் எழுத்து பூர்வமாக இருக்க வேண்டும்.
5.
எல்லோருடனும் நல்லுறவோடும் இணக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்.
6..
ஹஜ்ஜுடைய அமல்களை பாழ்படுத்தும் வீணான எந்தச்செயலிலும் பேச்சிலும் ஈடுபடாது,
குறிப்பாக பிறர் மனதைப் புண்படுத்துவதிலும் ஈடுபடாமலிருத்தல் வேண்டும்.
7.
பயண ஒழுங்குகளை கடைபிடிக்கவேண்டும்.
8.
குறிப்பாக பொறுமையை எப்போதும் மேற்கொள்ளவேண்டும்.
9
கவனம் முழவதும் வணக்க வழி பாடுகளிலும்,குர்ஆன் ஓதுவதிலும்,நபி(ஸல்) காட்டிய
திக்ருகளை மட்டும் ஓதுவதிலும் இருக்க வேண்டும். (மவ்லிது,ராத்தீபு,குத்பிய்யத் போன்ற மார்க்கம்
அனுமதிக்காத எதையும் அமல் என்ற முறையில் செய்வது கூடாது. இவை ஹஜ்ஜு வணக்கங்களை பாழ்படுத்திவிடும்.
10. நல்லவற்றைப் பேசுவதிலும், நல் அமல்களைப்புரிவதிலும் நாமும் ஈடுபடுவதோடு
பிறரையும் தூண்டவேண்டும்.
11
அய்யாமுத்தஷ;ரீக்குடைய (பிறை 11,12,13) நாட்களிலும், முஸ்தலிஃபாவிலும்,
குறிப்பாக அரஃபாவுடைய நாளிலும அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைத்துப் பாவ மன்னிப்புக் கோருதல்.
14. சிறு தவறுகள் கூட நிகழா வண்ணம் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டும்.
15.
இவ்விதிகள் யாவும் பேணப்பட்டால் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள்
மன்னிக்கப்பட்டு ‘ஹஜ்ஜுன் மப்ரூராக’ ( ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக) ஏற்றுக் கொள்ளப்படும்.
ஹஜ்ஜு முடிந்ததும் தமது ஹஜ்ஜு ஏற்கப்பட்டு விட்டதாக இறுமாந்து விடவேண்டாம்.
மவ்த்து-மரணம்- வரை உங்கள் அமல்களை எடை போட்ட பிறகே ஹஜ்ஜு ஏற்கப்படுவதும் ஏற்கப்படாததும்
தீர்மானிக்கப்படும் என்ற இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்களின் அறிவுரை இங்கே மிகவும் சிந்திக்கத்தக்கதாகும.
ஹாஜிகளுக்கு மூன்று உத்தரவாதங்கள்.
1. பாவங்கள் மன்னிக்கப்படும் (நஸாயீ, இப்னு ஹிப்பான்)
2.
கேட்பவை யாவும் வழங்கப்படும். (நஸாயீ, இப்னு ஹிப்பான்)
3.
மறுமையில் சுவனம் பரிசாகக் கிடைக்கும். ( நஸாயீ, திர்மிதி)
செய்யக்கூடாதவை :-
1. முடியை வெட்டுதல்,சவரம் செய்தல். அல்லது முடியைப் பிடுங்குதல்,2. நகத்தை
வெட்டுதல்,3. ஆண்கள் தலையை மறைத்தல், 4. நறுமணம் பூசுதல்,5. ஆண்கள் தையலுள்ள ஆடையை
அணிதல்,6.திருமண ஒப்பந்தம் செய்வதும் அது சம்மந்தமான பேச்சுகளில் ஈடுபடுவதும். 7.
கெட்டவார்த்தைகள் பேசுவது,சண்டைபோடுவது,வீண்பேச்சுகளில் ஈடுபடுவது.8.
தொலைக்காட்சியில் பொழுதைக் கழிப்பது.9. பெண்கள் முகத்தை மூடுவது (ஆண்களின் முன்னால்
நிற்க வேண்டியது வந்தால் முகத்தை மூடி ஹிஜாப் முறையை பேணிக்கொள்ளலாம்.)
10. மினாவில் 10-வது நாளில் லுஹ்ருக்குப்பின்னர் கல்லெறிவதும் 11.12,13 ம் நாட்களில்
லுஹ்ருக்கு முன்னரே எறிவதும் கூடாது.
11. கற்களை மொத்தமாக எறிவதும் கூடாது. ஒன்றன் பின் ஒன்றாக சிறிய,நடு,பெரிய
i
ஷத்தான்களுக்கு முறையே ஏழு கற்கள் வீதம் எறிவது. (கற்களை கழுவதும் கூடாது.)
( குறிப்பு: தடுக்கப்பட்ட இவற்றுள் ஏதேனும் ஒன்றை வேண்டுமென்றே செய்தால் பிராய
சித்தமாக ஒரு ஆட்டை அறுத்துப்பலி கொடுக்கவோ, ஆறு ஏழை களுக்கு உணவு கொடுக்கவோ, மூன்று
நாட்கள் நோன்பு நோற்கவோ செய்ய வேண்டும்.)
அனுமதிக்கப்பட்டவை:-
1. செருப்பு,மோதிரம்,கண் கண்ணாடி, செவிக்கருவி, கைக்கடிகாரம், இடுப்பு
வார்(பெல்டு),பணப்பை முதலியற்றை அணிவது.
2.
இஹ்ராமுடைய நிலையில் ஆண்களும், பெண்களும் இஹ்ராமுடைய உடையை மாற்றவோ, கழுகவோ
செய்யலாம்.
3.
தலைமுடி தானாக விழுந்தால் குற்றமில்லை.
4.
வெட்டுக் காயம் பட்டாலும் தவறில்லை.
தவிர்க்கவேண்டியவை! (கூடாது)
1. இஹ்ராம் அணியும்போதே இள்திபா(வலது தோளை திறந்து அணிவது கூடாது. தவாபின் போது
முதல் மூன்று சுற்றுகளில் மட்டுமே இள்திபாஃ (தோள் திறந்த நிலையில்) அணியவேண்டும்.
2. தவாபுடைய ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட துஆக்களை ஓதுவது கூடாது. விரும்பிய
துஆக்களை தமிழில் ஓதிக்கொள்ளலாம்.
3. தல்பியாவையும் துஆக்களையும் கோரசாக ஓதுவதும், துஆக்களை சப்தமாக ஓதுவதும் கூடாது,
4. ஹஜருல் அஸ்வத் கல்லை பிறரை தள்ளிக்கொண்டும் இடித்துக் கொண்டும் முத்தமிட முனைவது.
5. ருக்னுல் யமானியை முத்தமிடுவது.
6. கூட்ட நெரிசலில் மகாமு இப்றாஹீமில் வளைவுகளை ஏற்படுத்தி தொழுவது. (நெரசலில்
மஸ்ஜிதுல் ஹராமில் எங்கு வேண்டுமானாலும் தொழலாம்.
7. ஹிஜ்ரு இஸ்மாயீலில் ( கஃபாவை ஒட்டிய வளைவில்) தொழுவது.
8. மக்காவிலிருந்து கொண்டே தன்யுPம் (மஸ்ஜிது ஆயிஷh )சென்று பல உம்ரதாக்கள்
செய்வதற்கு அனுமதியே இpல்லை. ஒரே ஒரு உம்ராவுக்குத்தான் அனுமதியுண்டு. நபிகள் நாயகமோ,
நாயக்தோழர்களோ இவ்வாறு உம்ராச் செய்ததற்கு ஆதாரமே இல்லை. தவாப் எத்தனை தடவைகள்
வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
கண்டிப்பாக பின்பற்றவேண்டியவை:
1. மினாவிலும்,அரபாத்திலும்,முஸ்தலிபாவிலும் லுஹர், அஸர், இஷh தொழுகைகளை கஸ்ராக (
நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகச்) சுருக்கித் தொழுவது. இப்படித்தான் நபி
(
ஸல்) அவர்கள் தொழுதார்கள். நூங்கள் ஊரில் தொழுததைப் போலத்தான் தொழுவோம் என
அடம்பிடித்து கஸராகத் தொழாது நான்குநான்கு ரக்அத்களாக தொழுபவர்களைப்
பின்பற்றவேண்டாம்.
2. அரபாத்தில் லுஹ்ரையும் அஸ்ரையும் ஒரு பாங்கும் இரு இகாமத்துகளும் கூறி கஸ்ராகவும்
(
சுருக்கியும்) ஜம்ஆகவும் (சேர்த்தும்), ஒன்றன் பின் ஒனறாகத் தொழுவது.
3. 9-வது நாள் அரபாhத்தில் மக்ரிப் தொழாது முஸ்தலிபா சென்று காலதாமதமாயினும் முதலில்
பாங்கு சொல்லி மஃரிப் தொழுதுவிட்டு, பின்னர் இகாமத் கூறி இஷhவை கஸராக (சுருக்கித்)
தொழுவது)
4. 10-வது நாளில் கல்லெறிவது, குர்பானி கொடுப்பது,முடியெடுப்பது, தவாபுல் இபஃhபாளாச்
செய்வதுஆகிய நான்கையும் ஒரே நாளில் செய்வது சுன்னத் என்றாலும். நேரிசிலின் காரணமாக
தவாபுல் இஃபாளாவை 11,12.13 ஆகிய நாட்களில் நிறைவேற்றுவதை நபி (ஸல்) அவர்கள்
அனுமதித்துள்ளார்கள்.
5. பெண்கள் மாதவிடாயின் காரணமாக சுத்தமாக ஆவது வரை தவாபுல் இபாளாவை பயணம்
புறப்படுவது வரை பிற்படுத்தலாம்.
6. மக்காவில் தொழுவதற்கு ஓரிலட்சம் நன்மைகளும், மதீனாவில் தொழுதால் 1000 நன்மைகளும்,
பைத்துல் முகத்தஸில் தொழுதால் 500 நன்மைகளும் உள்ளன என்பதால் அதிக நன்மைகளைப் பெற
முனையவேண்டும். பல உம்ராக்களைச் செய்து உடல் தளர்ந்து ஹரமில் தொழாது அறைகளில் தொழுது
நன்மைகளைப் பலரும் பாழ்படுத்திக் கொள்கின்றனர். (அதிக விபரங்களுக்கு albaqavi.com
இணைய தளத்தைப் பார்க்க)
As Received   From  : Meera Sahib Mohamed [JACSA]

உம்ரா ஹஜ் செல்ல போகிறீர்களா குழந்தைகள் ஜாக்கிரதை என்னும் என் ஆக்கத்தையும் பார்க்கவும்.
 

No comments: