1.நபி அவர்கள் பால் அருந்தி விட்டு ஏன் வாய் கொப்பளித்தார்கள்?
பதில் : அதில் கொழுப்பு இருக்கின்ற காரணத்தினால் வாய் கொப்பளித்தார்கள்.
(ஆதாரம் புகாரி5609)
2.நபி அவர்கள் சித்ரதுல் முதஹாவில் எதனைக் கண்டார்கள்?
நான்கு நதிகளை கண்டார்கள்.
(ஆதாரம் புகாரி 5610)
3.சுவனத்தில் இருக்கும் இரண்டு ஆறுகளின் பெயர் என்ன?
சொர்க்கத்திலுள்ள ( ஸ்ல்ஸபீல், கவ்ஸர் ஆகிய)இரு நதிகளாம்.
(ஆதாரம் புகாரி 5610)
4.சித்ரதுல் முன் தஹாவில் நபி அவர்கள் கண்ட உலக நதிகள் என்ன?
நீல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாம்.
( ஆதாரம் புகாரி 5610)
5.சித்ரதுல் முதஹாவில் நபியவர்களுக்கு கொடுக்கப்பட்ட கிண்ணங்கள் எவைகள்?
பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியவை.
ஆதரம் புகாரி. 5610
6.நபி அவர்கள்சித்ரதுல் முன் தஹாவில் எந்தக் கிண்ணத்தைத் தேர்வு செய்தார்கள்?
பால் இருந்த கிண்ணத்தைத் தேர்வு செய்தார்கள்,
(ஆதாரம் புகாரி 5310)
7.பால் கிண்ணத்தை தேர்வு செய்த போது நபியவர்களுக்கு என்ன சொல்லப்பட்டது?
"நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்"
என்று சொல்லப்பட்டது.
(ஆதாரம் புகாரி 5610)
நன்றி தீன் குலப்பெண்மணி ( மகளீர் மாத இதழ்)
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments:
Post a Comment