ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு ப் பெற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த துஆ
------
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
#duaforprotection
யா அல்லாஹ்!
வயதினால் ஏற்படும் தீங்கிலிருந்தும், நெஞ்சத்தில் ஏற்படும் குழப்பங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
அல்லாஹ்வே! உனது கண்ணியத்தின் பொருட்டால் பாதுகாவல் தேடுகிறேன்.
உன்னையன்றி வணக்கத்துக்குரியோன் யாருமில்லை,
நீ என்னை வழிதவற செய்வதிலிருந்தும்,
சோதனைகளின் கடுமை,
கெடுவாய்ப்பு வந்தடைதல்,
துன்பம் தரும் விதி, எதிரிகளின் இழிவு படுத்துத்தும் பேச்சு ஆகியவற்றிலிருந்தும் என்னைக் காப்பாற்றவேண்டுகிறேன்.
நான் செய்த செயல்களினால் ஏற்படும் தீங்குகளிலிருந்தும்,
நான் செய்யத்தவறியதால் ஏற்படும் தீங்குகளிலிருந்தும் .
உனது அருட்கொடைகள் என்னிடமிருந்து நீங்கிவிடுவதிலிருந்தும்,
உனது பாதுகாப்பு மாறி போவதிலிருந்தும் திடீரென வரும் உனது சோதனைகளிலிருந்தும்,
உனது கோபங்கள் அனைத்திலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக!
எனது செவியேற்றலின் தீங்கிலிருந்தும்,
எனது பார்வை,நாவு,இதயம்,ஆகியவற்றின் தீங்கிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக!
Dua
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
No comments:
Post a Comment