Showing posts with label மெயிலில் வ‌ந்த‌ த‌க‌வ‌ல். Show all posts
Showing posts with label மெயிலில் வ‌ந்த‌ த‌க‌வ‌ல். Show all posts

Monday, December 20, 2010

சுவர்க்கத்தை பரிசாக பெற்று தரும் நற்கிரியைகள்



(மெய்லில் வந்த தகவல் கள் இதை பார்ப்பவர்களுக்கும் பயன் படும், ஒரு டைரி போல் இங்கு சேமித்து வைத்துள்ளேன் பயடனைபவர்கள் , பயண்டைந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் தெரிய படுத்துங்கள்.)



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


1. அநாதையைப் பொறுப்பேற்றல்:
"அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).

2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:
"எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).

ஆயத்துல் குர்ஸி:

"அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.

3. வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை:
'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு:
أشهد أن لا اله الاالله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله
'அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்றும் சான்று பகருகிறேன்) என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பிய வாயிலால் நுழைய முடியும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

4. அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் தொடர்ச்சியாக தொழுது வருதல்:
'எவர் அஸர் தொழுகையையும், சுபஹ் தொழுகையையும் (பேணிப் பாதுகாத்து) தொழுது வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

5. ஐவேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருதல்:
"எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், நஸாஈ).

6. ஸலாத்தை பரப்புதல்:
"உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரை, சுவர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம் கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7. வுழூச் செய்த பின் இரண்டு ரக்அத் மனப்பூர்வமாகத் தொழுதல்:
'ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்து உளப் பூர்வமாக இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

8. கல்வியைத் தேடல்:
"எவர் கல்வியைத் தேடி வெளியேறிச் செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலகு படுத்துகிறான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

9. பெற்றோருக்கு நன்மை செய்தல்:
அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும். இறைத் தூதரிடம் அவர் யார் எனக் கேட்கப்பட்டது? "பெற்றோர்களின் இருவரையோ அவர்களின் ஒருவரையோ முதிய வயதில் அடைந்து, பின்பு அவன் (அவர்கள் மூலம்) சுவர்க்கம் நுழையவில்லையானால் அவனேயாவான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10. நாவையும், மர்மப் பகுதியையும் பேணுதல்:
"எவர் இரு தாடைகளுக்கும், தொடைகளுக்கும் மத்தியில் உள்ளதை பாதுகாக்கிறேன் என பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

11. முஅத்தீனின் அழைப்புக்கு மறுமொழி பகருதல்:
"முஅத்தீன் (அழைப்பாளர்) பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர் அதே போன்று சொல்ல் வேண்டும், 'ஹய்யஅலஸ் ஸலாஹ், ஹய்யஅலல் பலாஹ்' என்று சொல்லும் போது மாத்திரம் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி' என்று சொல்ல வேண்டும், பின்பு முஅத்தீன் 'லா இலாஹ இல்லல்லாஹ்'என்று சொல்லும் போது யார் தூய உள்ளத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று பதில் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

12. ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருதல்:
"எவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அவைகளாவன: லுஹருக்கு முன் 4ரக்அத்துகள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்துகள், மஃரிபுக்குப் பின் 2ரக்அத்துகள், இஷாவுக்குப்பின் 2 ரக்அத்துகள், பஜ்ருக்கு முன் 2ரக்அத்துகள்". (திர்மிதி)

13. அல்லாஹ்வின் 99 திருநாமங்களை மனனமிட்டு அதன்படி செயல்படுதல்:
"அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன. எவர் அவைகளை மனனமிட்டு அதன்படி செயல்படுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

14. நான்கு விடயங்கள் ஒரு சேர பெற்று விட்டவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்:
"உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்? என நபி (ஸல்) அவர்கள் குழுமியிருந்த தனது தோழர்களிடம் வினவினார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்கு நான் என்றார்கள். இன்று உங்களில் நோயாளியை சுகம் விசாரிக்க சென்றது யார்? என அன்னார் வினவினார், அதற்கும் நான் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என அன்னார் கேட்டபோது, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்று உங்களில் ஏழைகளுக்கு உணவளித்தவர் யார்? என அன்னார் கேட்டார், அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். எவருக்கு மேற் கூறப்பட்ட இவ்விடயங்கள் ஒரே நாளில் ஒரு சேர கிடைத்துவிடுமோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்து விடுவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

15. இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்:
"முஆதே! எவர் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

16."லா இலாஹ இல்லல்லாஹ்" வை உளத்தூய்மையுடன் மொழிதல்:
"எவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உளத்தூய்மையுடன் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

17. எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் நுழைவர்:
"நபி (ஸல்) அவர்கள்: எனது சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையும், தண்டனையுமின்றி சுவர்க்கம் நுழைவார்கள் எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். அங்கிருந்தோர் தங்களுக்குள் அந்த எழுபதாயிரம் பேர் நபியோடு தோழமை கொண்டு இருந்தவர்கள், மற்றும் சிலர் இல்லை அவர்கள் இஸ்லாத்தில் பிறந்து அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காதவர்கள். வீட்டைவிட்டு வெளியில் வந்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்க நடந்தவைகளைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் அந்த எழுபதாயிரம் பேர்:

மந்திரித்துப் பார்க்காதவர்கள், மந்திரித்துப் பார்க்குமாறு கோராதவர்கள், பறவை சாஸ்த்திரம் பார்க்காதவர்கள் முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்திருக்கக் கூடியவர்கள் எனக் கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எழுந்து நபியே நானும் அவர்களுடன் இருக்க பிரார்த்தியுங்கள், நீரும் அவர்களுடன் இருப்பீர் எனக் கூறினார்கள். மற்றொருவர் எழுந்து தனக்கும் பிரார்த்திக்குமாறு வேண்டினார், அதற்கு நபியவர்கள் "உக்காஷா"உம்மை முந்திவிட்டார் எனக்கூறினார்கள். (முஸ்லிம்).

"நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்" (குர்ஆன் 8:107,108).


__._,_.___

.

__
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

Vassalam

Esa
--

Tuesday, December 14, 2010

முஹர்ரம் 9, 10 அல்லது 10,11 நோன்பு வைப்பது சுன்னத்தாகும்


(மெயிலில் வந்த தகவல்)

நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றி அந்த நாட்களில் நோன்பு வைத்து பாவங்கள் மன்னிக்கப்பட பிரார்த்திப்போமாக

وَعنْ أَبي هُريرةَ رَضِيَ اللَّه عَنْهُ قالَ : قالَ رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم :
«أَفْضَلُ الصيَّامِ بعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ المُحَرَّمُ ، وَأَفْضَلُ الصَّلاةِ بعدَ الفَرِيضَةِ صَلاةُ اللَّيْل»
رواه مُسلِمٌ நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றி அந்த நாட்களில் நோன்பு வைத்து பாவங்கள் மன்னிக்கப்பட பிரார்த்திப்போமாக

وَعنْ أَبي هُريرةَ رَضِيَ اللَّه عَنْهُ قالَ : قالَ رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم :
«أَفْضَلُ الصيَّامِ بعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ المُحَرَّمُ ، وَأَفْضَلُ الصَّلاةِ بعدَ الفَرِيضَةِ صَلاةُ اللَّيْل»
رواه مُسلِمٌ

ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).



நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்


ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

Tuesday, October 12, 2010

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்கஅதா

ஹுதைபிய்யா உடன்படிக்கை:

நபி(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு கஃபத்துல்லா சென்று உம்ரா செய்வது போன்று கனவு கண்டார்கள். இதை நிறைவேற்றும் நோக்கில் தோழர்களிடம் உம்ரா செய்ய தயாராகும்படி அறிவிப்புச் செய்தார்கள். ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு, துல்கஅதா மாதத்தில் சுமார் 1400 அல்லது 1500 தோழர்களுடன் உம்ரா செய்ய புறப்பட்டார்கள். நபியவர்களின் வருகையை கேள்விப்பட்ட மக்கத்து குறைஷிகள், உம்ரா செய்ய அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா என்னும் இடத்தில் தங்கி தோழர்களுடன் ஆலோசித்து, இறுதியாக ஒரு மரத்தடியில் தோழர்களிடம் போர் செய்வதற்கு உறுதிமொழி வாங்கினார்கள். இந்த உறுதிமொழியைத்தான் “பைஅத்துர் ரிழ்வான்” என்று சொல்லப்படுகிறது. இது குறித்து இறைவன் திருமறையில்.....

(நபியே) நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளை, அவர்கள் மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்தபோது பொருந்திக்கொண்டான்; பின்னர் அவர்களின் இதயங்களிலிருந்ததை நன்கறிந்து, அவர்கள் மீது அமைதியை இறக்கிவைத்தான். அன்றியும், சமீபமான வெற்றியையும் அவர்களுக்கு (அருட்கொடையாக)க் கொடுத்தான். அல்குர்ஆன் (48;18)

முஸ்லிகள் போர்செய்யவும் தயாராகிவிட்டார்கள் என்பதை அறிந்த மக்கத்து குரைஷிகள், நபியவர்களிடம் சமாதான ஒப்பந்தம் செய்ய முன் வந்தனர். அதன்படி அடுத்த வருடம் உம்ரா செய்து கொள்ள வேண்டும் என்றும், இருதரப்பிலும் பத்து வருடங்களுக்கு போருக்கான எவ்வித ஆயத்தமும் இருக்கக் கூடாது என்றும், மேலும் சில உறுதிமொழிகள் எழுதப்பட்டு இருதரப்பிலும் கையொப்பமிடப்பட்டது. இதைத்தான் இஸ்லாமிய வரலாற்றில் “ஹுதைபிய்யா உடன்படிக்கை” என்று கூறப்படுகிறது.


பனூகுரைளா யுத்தம்:

ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஆயுதங்களை கீழே வைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். நபியவர்கள் ‘ஆம்’ என்றனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், மலக்குகள் இன்னும் தங்களது ஆயுதங்களை கீழே வைக்கவில்லை. பனூகுரைளாவினரிடம் செல்ல(போரிட) அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டுள்ளான் என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் ஒருவரை மக்களிடம் அனுப்பி அறிவிப்புச் செய்ய சொன்னார்கள்.

யார் செவிசாய்த்து, கட்டளைக்கு கட்டுப்படுகின்றார்களோ அவர்கள் தங்களது அஸ்ர் தொழுகையை பனூகுரைளாவினரிடம் சென்று தொழட்டும்”. அதாவது உடனே போருக்குத் தயாராகி சென்றுவிட வேண்டும் என்று அறிவிப்புச் செய்தார்கள். இப்போர் ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டு துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது.


எகிப்து அரசருக்கு இஸ்லாமிய அழைப்பு:
எகிப்து நாட்டு அரசர் “முகவ்கிஸ்” என்பவருக்கு, இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுத்து நபி(ஸல்)அவர்கள் கடிதம் எழுதினார்கள். இக்கடிதம் ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு துல்கஅதா மாதத்தில் எழுதப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள்:

நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாழ்நாளில் நான்கு உம்ராக்களை நிறைவேற்றியுள்ளார்கள். அவை அனைத்துமே “துல்கஅதா” மாதத்தில்தான் செய்துள்ளார்கள்

1. உம்ரத்துல் ஹுதைபிய்யா (ஹிஜ்ரி-6)
2. உம்ரத்துல் கழா (ஹிஜ்ரி-7)
3. ”ஜிஃரானா” என்ற இடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து செய்த உம்ரா (ஹிஜ்ரி-8)
4. இறுதி ஹஜ்ஜு செய்ய தயாராகிய போது செய்த உம்ரா (ஹிஜ்ரி-10)
முதல் அகபா ஒப்பந்தம்:

நபித்துவத்தின் 11-வது வருடம், மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்த அன்சாரிகளில் ஆறு பேர்கள், நபி(ஸல்) அவர்களின் போதனையால் முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்று, மதீனா சென்று அவர்கள் இஸ்லாத்தை மற்ற மக்களுக்கும் எடுத்துக் கூறியதின் பலனாக மேலும் சிலர் இஸ்லாத்தை ஏற்றார்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அந்த சிலருடன், முதலாவதாக இஸ்லாத்தை ஏற்ற சிலரும் சேர்ந்து



நபித்துவத்தின் 12-வது வருடம், மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு சுமார் 12 பேர் (9-பேர் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்கள், 3-பேர் அவ்ஸ் கிளையைச் சேர்ந்தவர்கள்) வந்தார்கள். இவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ‘அகபா’ என்ற இடத்தில், இஸ்லாத்தின் அடிப்படையில் வாழ ஒப்பந்தம் செய்தார்கள். இதையே “முதல் அகபா” ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.

தொகுப்பு: மவ்லவி அ.சீனி நைனார் முஹம்மது தாவூதி (துபாய் 0559764994

Thursday, September 9, 2010

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: ஷவ்வால்







பிஸ்மில்லாஹிர் ர‌ஹ்மானிர் ர‌ஹீம்






ஈது பெருநாட்க‌ள் க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌ விப‌ர‌ம்:
இஸ்லாத்தில் ஈது பெருநாட்க‌ள் க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கு கார‌ணம்;




1.அல்லாஹுத்த‌ஆலா அடியானுக்கு இட்ட‌ க‌ட்ட‌ளையை ஏற்று, அவ‌னுக்கு முற்றிலும் அடிப‌ணிந்து அதை நிறைவேற்றிய‌ ம‌கிழ்ச்சியை அவ‌ன‌து தூத‌ர் காட்டிய‌ வ‌ழியில் வெளிப்ப‌டுத்துவ‌து.




2. இர‌த்த‌ ப‌ந்த‌ உற‌வின‌ர்க‌ளுக்கும், ஏழைக‌ளுக்கும், தேவையுடைய‌வ‌ர்க‌ளுக்கும் உத‌வி செய்து அவ‌ர்க‌ளையும் ம‌கிழ்ச்சிய‌டைய‌ச் செய்வ‌து.



அன‌ஸ்(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: அல்லாஹுடைய‌ தூத‌ர்(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் மதீனாவிற்கு (ஹிஜ்ர‌த் செய்து) வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் ம‌தீனாவாசிக‌ள்(அன்சாரிக‌ள்) இர‌ண்டு நாட்க‌ள் விளையாடிக் கொண்டிருந்தார்க‌ள். இவ்விரு நாட்க‌ளில் ஏன் விளையாடுகிறீர்க‌ள் என்று ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்கு, அறியாமைக்கால‌த்தில் இவ்விரு நாட்க‌ளில் விளையாடுவோம் என்று ப‌தில் கூறினார்க‌ள். அப்போது அண்ண‌ல் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூறினார்கள்: நிச்ச‌ய‌மாக‌ அல்லாஹ் இவ்விரு நாட்க‌ளை விட‌ சிறந்த‌ நாட்க‌ளை உங்களுக்கு ப‌க‌ர‌மாக்கி இருக்கின்றான். அதுதான் ஈதுல் அழ்ஹா, ஈதுல் ஃபித்ரு (ஆகிய‌ இரு பெருநாட்க‌ள்) ஆகும். (அஹ்ம‌த்‍‍ந‌ஸ‌யீஇப்னு ஹிப்பான்)



இத‌ன்ப‌டி, முத‌ல் ஈதுல் ஃபித்ரு பெருநாள் ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு முத‌ல் க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌து. ஈதுல் ஃபித்ரு பெருநாள் தின‌த்தில் க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌ செய‌ல் பாடுக‌ள்:


ஈதுல் ஃபித்ரு பெருநாள் தின‌த்தில் க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌ செய‌ல் பாடுக‌ள்:




1. குளிப்ப‌து



2. புதிய‌ ஆடைக‌ள் அணிந்து கொள்ளுத‌ல், அல்லது த‌ன்னிட‌ம் இருக்கும் ஆடைக‌ளில் சிற‌ந்த‌ ஆடையை அணிந்து கொள்ளுத‌ல்.



3. தொழுகைக்கு புறப்படும் முன் உணவு உண்டுகொள்ளுத‌ல். ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ஈதுல் ஃபித்ரு பெருநாள‌ன்று தொழுகைக்குச் செல்லும் முன் ஒற்றைப்ப‌டையாக‌ பேரீத்த‌ம் ப‌ழ‌ங்க‌ளை சாப்பிட்டார்க‌ள் என்று அன‌ஸ்(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்.



4. ஜ‌க்காத்துல் ஃபித்ரை தொழுகைக்கு முன்பே உறிய‌வ‌ர்க‌ளுக்கு கொடுத்து விடுத‌ல். இர‌ண்ட‌ரை கிலோ கோதுமை அல்ல‌து அரிசி போன்ற‌ தானிய‌மாக‌வோ, அல்ல‌து அத‌ன் கிர‌ய‌த்தையோ ஃபித்ராவாக‌ நிறைவேற்ற‌ வேண்டும்.



5. இர‌த்த‌ ப‌ந்த‌ உற‌வின‌ர்க‌ள் ஏழைக‌ளுக்கு உபகார‌ம் செய்த‌ல்.



6. தொழுகைக்குச் செல்லும்போது ஒரு வ‌ழியாகவும், திரும்பும்போது ம‌ற்றொரு வ‌ழியாக‌வும் வ‌‌ருத‌ல்.



7. பெருநாள‌ன்று ம‌கிழ்ச்சியை வெளிப்ப‌டுத்தும் வ‌கையில் விளையாட்டுக்க‌ளிலும் ஈடுப‌ட‌லாம்.



இத‌னால் க‌ட‌மையான‌ தொழுகையைவிட்டு விடாம‌லும், முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ள் ம‌ற்றும் சொத்துக்க‌ளுக்கு பாதிப்பு ஏற்ப‌டுத்தாத‌ வ‌கையிலும் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும்.




முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள் உஹ‌து யுத்த‌ம்:
ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு, ஷ‌வ்வால் மாத‌ம் ஏழாம் நாள் ச‌னிக்கிழ‌மை நிக‌ழ்ந்த‌து. இப்போர் முஸ்லிம்க‌ளுக்கு க‌டும் சோத‌னையாக‌ அமைந்த‌து. இதில் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் சிறிய‌ த‌கப்ப‌னார் ஹ‌ம்ஜா(ர‌ழி) அவ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டு ஷ‌ஹீது (வீர‌ம‌ர‌ண‌ம்) அடைந்தார்க‌ள். மேலும் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் முன் ப‌ல் உடைக்க‌ப்ப‌ட்டு முக‌த்தில் காய‌ம் ஏற்ப‌ட்டு, வ‌ழிந்த‌ குருதியை துடைத்த‌வ‌ர்க‌ளாக‌...,
"அல்லாஹ்வின் தூத‌ராகிய‌ நான், ம‌க்க‌ளை அல்லாஹ்வின் ப‌க்க‌ம் அழைக்க‌ அவ‌ர்க‌ளோ என் முக‌த்தையும், முன் ப‌ல்லையும் உடைத்து விட‌ எவ்வாறு அவ‌ர்க‌ள் வெற்றிபெற முடியும்? என்று கூறினார்க‌ள்".
இப்போரில் க‌தாதா(ர‌ழி) அவ‌ர்க‌ளின் க‌ண்ணில் காய‌ம் ஏற்ப‌ட்ட‌தால் விழி பிதுங்கி விட்ட‌து. ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அவ‌ர‌து க‌ண்ணில் த‌ன‌து கையை வைத்து துஆச் செய்தார்க‌ள். மீண்டும் ந‌ல்ல‌ கூர்மையான பார்வையை பெற்றுக் கொண்டார்.




அல்அஹ்ஜாப் யுத்தம்:



ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு, ஷவ்வால் பிறை 5ஆம் நாள் இந்த யுத்தம் நடைபெற்றது. இதை “கன்தக் யுத்தம்” என்றும் சொல்லப்படும். இதற்கு முன் நடைபெற்ற பத்ரு, உஹது யுத்தங்கள் முஸ்லிம்களுக்கும் இணைவைப்பவர்களுக்கும் மத்தியில் நடைபெற்று அவைகளில் முஸ்லிம்களே வெற்றி பெற்றனர். இவற்றை கவனித்துக்கொண்டிருந்த யூதர்கள், முஸ்லிம்களைத் தாக்குவதற்கு மக்கத்து குரைஷிகள் உட்பட அரபு நாட்டின் அனைத்து கூட்டத்தினரையும் ஒன்று திரட்டி ஒரு பெரும் படையை தயார் செய்து வந்தனர். இதற்கு காரணகர்த்தாவாக இருந்தது, யூதர்களில் பனூ நழீர் கூட்டத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் அவர்களில் ஒருவனான கஃப் இப்னு அஷ்ரஃப் இப்னு அக்தப் என்பவனும் ஆகும்.






இந்த விபரம் நபி(ஸல்) அவர்களுக்கு தெரியவரவே, சஹாபாக்களுடன் ஆலோசனை செய்தார்கள். சல்மான் ஃபார்ஸி(ரழி) என்ற தோழர், தங்களது பாரஸீக நாட்டில் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அகழ் தோண்டி போரிடும் முறையை கூறினார்கள். அதனை ஏற்ற நபி(ஸல்) அவர்கள், மதீனாவைச் சுற்றி அகழ் தோண்ட கட்டளையிட்டு தாங்களும் அப்பணியில் ஈடுபட்டார்கள். இப்போர் முறையை புதிதாக பார்த்த யூதர்களையும், இணை வைப்போர்களையும்



அல்லாஹ் புறமுதுகிட்டு ஓடிடச் செய்தான். இப்போரைப்பற்றியே அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.



“நிராகரித்தோரை அவர்களின் கோபத்துடனேயே அல்லாஹ் திருப்பி விட்டான். அவர்கள் எந்த நன்மையையும் அடையவில்லை. நம்பிக்கையாளர்களுக்காகப் போரிட அல்லாஹ்வே போதுமானவன். அல்லாஹ் வலிமைமிக்கவனும் யாவற்றையும் மிகைத்தவனுமாக இருக்கிறான்”. குர்ஆன் (33;25)




ஆயிஷா(ரழி) அவர்கள்:



நபித்துவத்தின் 11ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களை மணமுடித்தார்கள். பெண்களில் அவர்களே அதிக மார்க்க ஞானமிக்கவர்களாக இருந்தார்கள். உம்மு ஸலமா(ரழி) அவர்கள்:
ஹிஜ்ரி 4ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதக்கடைசியில் நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரழி) அவர்களை மணமுடித்தார்கள்.






பனூ கைனூகா கிளையினருடன் போர்:



நபி(ஸல்) அவர்கள் யூதர்களில் பனூ கைனூகா கூட்டத்தினருடன் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அவ்வொப்பந்தத்தை அவர்கள் முறித்து, முஸ்லிம்களுடன் வரம்பு மீறி நடந்து கொண்டதால் அவர்களுடன் போரிட நேர்ந்தது. இப்போர் ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு ஷவ்வால் பிறை 15இல் தொடங்கி சுமார் 15 நாட்கள் நீடித்தது. இறுதியில் யூதர்கள் அனைவரும் சரணடைந்தனர்.




தாயிஃப் போர்:



ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் ஹுனைன் யுத்தம் முடிந்தவுடன் தாயிஃப் கோட்டை முற்றுகை தொடங்கியது. இங்குள்ள ஸகீஃப் கூட்டத்தினருக்கு எதிராக பிரார்த்தனை செய்யுமாறு நபி(ஸல்) அவர்களிடம் சிலர் வேண்ட, அவர்களின் நேர்வழிக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.






ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள்:



நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ அய்யூப்(ரழி) அறிவிக்கிறார்கள்: யார் ரமழான் மாத்தில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்புகள் வைக்கிறாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போன்றாவார். (முஸ்லிம்)




தொகுப்பு: மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி. துபாய். (0559764994)









Thursday, January 7, 2010

செல்வத்தைப் பெருக்கும் ஆசை - 4

இறைவனுக்கு நெருக்கமாக்கி வைக்கும் ஆற்றல் செல்வத்திற்கு இல்லை! மாறாக ஒருவரின் நற்கருமங்களே இறை நெருக்கத்தைப் பெற்றுத்தரும்!
“இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்” (அல்-குர்ஆன் 34:37)


கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவினால் அல்லாஹ் இரு மடங்கு கூலி தருவான்!
“(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 2:245)


தான தர்மங்கள் செய்வதினால் வறுமை உண்டாகாது! மாறாக செல்வம் பெருகும்!
“(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்¢ யாவற்றையும் நன்கறிபவன்” (அல்-குர்ஆன் 2:268)


ஒவ்வொரு முறை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போதும் 1×7x100=700 மடங்கு நன்மைகள் கிடைக்கும்!
“அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்” (அல்-குர்ஆன் 2:261)


செய்த தர்மங்களை சொல்லிக்காட்டாதிருந்தால் நற்கூலிகள் கிடைக்கும்!
“அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 2:262)


அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான தர்மங்கள் செய்பவருக்கான உவமானம்!
“அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம்பார்க்கின்றவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:265)


அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களுக்கு தான தர்மங்கள் செய்யுங்கள்!
பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்” (அல்-குர்ஆன் 2:273)


நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்!
“நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 3:92)


பணக்காரர்களுக்கிடையில் செல்வம் சுற்றிக்கொண்டிருக்கக் கூடாது!
“அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்” (அல்-குர்ஆன் 59:7)


தான தர்மங்கள் செய்வதினால் உள்ளும் புறமும் தூய்மையடையும்!
“(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனைஅவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 9:103)

Monday, January 4, 2010

செல்வத்தைப் பெருக்கும் ஆசை - 3

உங்களின் பிள்ளைகளும், செல்வங்களும் இறைவனை மறக்கச் செய்ய வேண்டாம்!
“ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்” (அல்-குர்ஆன் 63:9)


இவ்வுலகின் செல்வம், செல்வாக்கு மற்றும் அதிகாரங்கள் யாவும் அழிந்து விடக் கூடியவைகள்!
“ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: ‘என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! ‘அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- ‘(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? ‘என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! ‘என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!’ (என்று அரற்றுவான்)” (அல்-குர்ஆன் 69:25-29)


நிலையற்ற இவ்வுலக செல்வத்தின் மீது காதல் கொண்டுள்ள மனிதன்!
“குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக)” (அல்-குர்ஆன் 104:1-9)


மறுமையில் பயனளிக்காத இவ்வுலக செல்வங்கள்!
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா” (அல்-குர்ஆன் 26:88)


இம்மையின் செல்வ சுகங்களில் மூழ்கிக் கிடந்தவர்களின் செயல்கள் யாவும் அழிந்து விடும்!
“(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்” (அல்-குர்ஆன் 9:69)


நரகத்தில் விழுந்து விட்டால் நம்முடைய இவ்வுலக செல்வங்கள் எவ்விதப் பயனும் அளிக்காது!
“ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது” (அல்-குர்ஆன் 92:11)



மெயிலில் வ‌ந்த‌ த‌க‌வ‌ல்





தொட‌ரும்

செல்வத்தைப் பெருக்கும் ஆசை - 2

அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வ செழிப்பைக் கொண்டு ஆணவம் கொள்ளாதீர்கள்! அல்லாஹ் காரூனுக்கு வழங்கிய செல்வத்திலிருந்தும், தண்டனையிலிருந்தும் படிப்பினை பெறுங்கள்!
“நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: ‘நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்’ என்று கூறினார்கள். ‘மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை’ (என்றும் கூறினார்கள்). (அதற்கு அவன்) கூறினான்: ‘எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!’ இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள். அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: ‘ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்’ என்று கூறினார்கள். கல்வி ஞானம் பெற்றவர்களோ; ‘உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்’ என்று கூறினார்கள். ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், ‘ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்’ என்று கூறினார்கள்” (அல்-குர்ஆன் 28:76-82)


செல்வ செழிப்புள்ளவர்களைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்!
“இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்” (அல்-குர்ஆன் 9:85)

நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வத்தைக் கண்டு அதைப் போல் அடைய வேண்டும் என ஆசைக் கொள்ளாதீர்கள்!



“நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்” (அல்-குர்ஆன் 43:33)

மெயிலில் வ‌ந்த‌ த‌க‌வ‌ல்
தொட‌ரும்