Wednesday, December 23, 2009

முஹர்ரம் மாதம் - ஆஷுரா



இஸ்லாமிய வருட பிறப்பு.

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னனியை நாம் காண்போம்.




நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர் அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும் என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நான் தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி)-புகாரி,முஸ்லிம்)





இந்த நபி மூலம் ஆஷுராதினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்தாலும் ஆஷுரா நோன்பு கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்தபோது ரமழான் நோன்பு கடமையாக்கப் படாத நேரத்தில் இந்த நோன்பைக் கடமையாக்கி இருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் இந்த ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.




நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்த போது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளை யிட்டிருந்தனர்.



ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர்கள் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பியவர்கள் விட்டு விடலாம் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா(ரழி)- புகாரி,முஸ்லிம்) இதே கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)




ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர். என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளூம் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விடார்கள். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி)- முஸ்லிம்,அஹ்மத்,அபூதாவூத்)




மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளூம், பத்தாம் நாளூம், நோன்பு நோற்பது ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம், 10ம் வைக்கவேண்டும். பத்திலும் பதினொன்றிலும் வைக்க ஆதாரமில்லை.
http://www.readislam.net/asura.html








நன்றி பாத்திமா ஜொஹ்ரா,


இஸ்லாமிய வருடங்களில் முதல் வருடம் இந்த முஹரம் மாதம் தான், ஹஜ் மாதம் இஸ்லாமிய வருடங்களின் கடைசி மாதம்.
நோன்பு, 9, 10 வைப்பது சிறப்பு.
ஹஜ் வருட கடைசி நாளும், முஹரம் முதல் நாளிலும் நோன்பு வைத்தால் நாம் செய்த பாவங்கள் தீரும் என்பார்கள்.

மீதி பதிவை இரண்டொரு நாளில் போடுகிறேன்

2 comments:

S.A. நவாஸுதீன் said...

அருமையானதொரு பகிர்வு சகோதரி. பாராட்டுக்கள்

Jaleela Kamal said...

தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி