Sunday, March 3, 2013

தினம் கேட்கவேண்டிய துஆ



அல்லாவின் அடியார்களுக்கு ஐந்து கண்டம் உள்ளது ரஸூல்(ஸல்) அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களை அழைத்து ஓவ்வொரு அடியார்களுக்கும் ஐந்து கண்டங்கள் உண்டு. என அறிவித்தார்கள். அபூபக்கர் சித்த்க் அவர்கள் என்ன என்று கேட்டார்கள். அதற்கு ரஸுல் (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்கண்டவாறு கூறினார்கள்.

1. மௌத்

2.கபருடைய அதாபும் இடுக்கமும்

3.முன்கர், நக்கீர் கேள்வி கணக்கு

4.மீஸான் தராசு

5.ஸிராத்துல் முஸ்தகீம் பாலம்


1. இதை கேட்ட அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் ஏழு வானமும் , மலாயிக்கத்து மார்க்களும் கேட்கும் படி அழுதார்கள். அழுத சப்தத்தை கேட்டதும் வனவர் ஜீப்ரீல் அல்லாவின் உத்த்ரவுபடி ரஸூல் (ஸல்) அலைஹி வஸல்லம் அவகளிடம் வந்து நோய்க்கு எவ்வாறு மருந்து இருப்பதோ அது போல இதற்கும் மருந்து உள்ளது. உடனே ரசூல் (ஸல்) அலைஹிவஸல்லம் என்ன மருந்து எனக் கேட்டார்கள், அதற்கு ஜீப்ரீல்.


1. சுப்ஹூ தொழுகையில் மௌத் உடைய கஷ்டத்தை எளிதாக்கவும் என துஆ கேட்கவும்.


2. லுஹர் தொழுகையில் கப்ருடைய அதாபையும் இடுக்கத்தையும் எளிக்கவும் என துஆ கேட்கவும்.


3. அஸர் தொழுகையில் முன்கர்,நக்கீர் உடைய கேள்வி கணக்கை எளிதாக்கி வை எனத் துஆ கேட்கவும்.



4. மக்ரிப் தொழுகையில் 'மீஸான்'தராசில் நன்மையை அதிக மாக்கிவை எனத் துஆ கேட்கவும் .


5. இஷா தொழுகையில் 'ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக் கடக்க கிருபை செய் எனத்துஆ கேட்கவும் என்றார்கள்.

தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு நற்செயல்.

1. தொழுகையில் இருந்தால் கல்பை பேணுதல்

2. வஜீபனத்தில் இருந்தால் அல்கை பேணுதல்.

3.பிறருடைய வீட்டில் இருந்தால் கண்ணை பேணுதல்.

4.மனிதர்களுக்கிடையில் இருந்தால் நாவை பேணுதல்

5.& 6. இரண்டை நினைக்கவும் செய்கிறோம், மறந்து விடுகிறோம்.
1. அல்லா, 2. மௌத்

7.பிறருக்கு நீ செய்த உபகாரத்தை மறந்து விடவேண்டும்.

8. பிறர் உனக்கு செய்த தீங்கையும் மறந்து விட வேண்டும்.

இது எனக்கு என் கிரான்மா சொன்னது.

No comments: