Sunday, December 1, 2013

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!






வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!

இஸ்திகாரா  தொழுகையை தொழும் முறை:
பர்ளு தொழுகை அல்லாத இரண்டு ரக்அத்துக்களை இஸ்திகாரா தொழுகை என்ற என்னத்தோடு  தொழ வேண்டும். அதில் சூரா பாதிஹாவையும் அதன் பின்னால் அல்குர்-ஆனில் சில வசனங்களையும் ஓத வேண்டும். சுஜூதில் அல்லது அத்தஹியாத்தில் அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பிறகு  இஸ்திகாரா நபிமொழியில் வரக்கூடிய பிரார்த்தனையை, துஆவை பொருள் விளங்கி ஓதவேண்டும். தொழுகைக்கு பிறகு பிரார்த்திப்பதே மிக சரியான முறையாகும்.




Tea kadai - Thank you

இஸ்திகாரா துஆ


اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ رَضِّنِي بِهِ 



“அல்லாஹூம்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பீகுதுரதிக, வஅஸ் அலுக மின் பழுலிகல் அழீம், பஇன்னக தக்திர் வலா அக்திர், வதஃலம் வலா அஃலம், வ அன்த அல்லாமுல் குயூப், அல்லாஹூம்ம இன் குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர – (தேவையைக் குறிப்பிட வேண்டும்) -கைருன் லீ பீ தீனீ வமஆஷீ வஆகிபது அம்ரீ பக்துர்கு லீ வயஸ்ஸிர்கு லீ சும்ம பாரிக்லீபீ, வ இன்குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீதீனீ  வமாஆஷீ  வ ஆகிபது அமரீ பஸ்ரிப்கு அன்னீ வஸ்ரிப்னீ அன்கூ  வக்துர்லியல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்”


இதன் பொருள்:
யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கின்றேன்;
மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்மேலும் உன்னிடமிருந்து உனது மகத்தான அருளை யாசிக்கிறேன்ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன்என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. 

மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதனையும் அறியமாட்டேன். மேலும் நீயே மறைவானவை அனைத்தும் அறிந்தவன்! 
யாஅல்லாஹ்! இந்த விஷயம் (விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்) எனக்கும்எனது தீனுக்கும்எனது வாழ்கைக்கும்எனது விவகாரத்தின் முடிவுக்கும்-இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியானதாமதமான விவகாராத்திற்கும் – நன்மையானது என நீ அறிந்தால் இதனை எனது விதியில் சேர்ப்பாயாக! 
மேலும் இதனை எனக்கு எளிமையாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கியம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி எனக்குஎனது தீனுக்கும் எனது வாழ்கைக்கும் எனது விவகாரத்திம் முடிவுக்கும் – இவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான்தாமதமான விவகாரத்துக்கும்) தீமையானது என நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றி விடுவாயாக! 

மேலும் எனது விதியில் நன்மையை சேர்ப்பாயாக! அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்கு திருப்தி ஏற்படுத்தித் தருவாயாக!” (ஆதாரம் புகாரி)


Dua Istikhara
இஸ்திகாராதொழுகை,
SuvanathonRal 

 www.chennaiplazaki.com