2) குர்ஆனில் மொத்த ஆயத்துக்கள் எத்தனை ?
குர்ஆனில் மொத்த ஆயத்துக்கள் 6,666 (ஆறாய்யிரத்து அறுநூற்றி அறுபத்தியாறு) ஆகும்
3)குர்ஆனில் மொத்த சூராக்கள் ஏத்தனை ?
குர்ஆனில் மொத்த சூராக்கள் 114 (நூற்றி பதினான்கு ) ஆகும்.
4)குர்ஆனில் மொத்த ஜூஸ்வுகள் எத்தனை ?
குர்ஆனில் மொத்த ஜூஸ்வுகள் 30 (முப்பது) ஆகும்,
5)குர்ஆன் எத்தனை மன்ஸிலாக பிரிக்கப்பட்டு உள்ளது ?
குர்ஆன் ஏழு மன்ஸிலாக பிரிக்கப்பட்டுள்ளது.
6)குர்ஆனில் முதன் முதலாக நாயகம் (ஸல்)அவர்களுக்கு இறங்கிய ஆயத்து எது ?
குர்ஆனில் முதன் முதலாக நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறங்கிய ஆயத்து இக்ரஃபிஸ்மி என்ற ஆயத்தாகும்.
7)குர்ஆனில் அல்லாஹ் என்ற வார்த்தை எத்தனைமுறை வருகிறது ?
குர்ஆனில் அல்லாஹ் என்ற வார்த்தை 2,360 இரண்டாயிரத்து முன்னூற்றி அறுபது முறை வருகிறது.
8)குர்ஆன் என்ற அரபிச்சொல்லுக்கு தமிழ் அர்த்தம் என்ன ?
குர்ஆன் என்ற அரபிச்சொல்லுக்கு தமிழ் அர்த்தம் ஓதப்பட்டது,ஓதப்படக்கூடியது, ஓதப்பட வேண்டியது என்று பொருள்பட கூறலாம்.
9)குர்ஆன் மொத்தம் எத்தனை ஆண்டுகளில் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டது ?
குர்ஆன் மொத்தம் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இருபத்தி மூன்று ஆண்டுகளில் இறக்கி முடிக்கப்பட்டது.
10)குர்ஆனில் மொத்தம் எத்தனை நபி மார்களுடைய சரித்திரங்களை இறைவன் கூறியுள்ளான் ?
மொத்தம் இருபத்தி ஐந்து நபி மார்களின் சரித்திரங்களை இறைவன் கூறியுள்ளான்.அப்பெயர்கள் பின்வருமாறு.
1) ஆதம்(அலை)
2)நூஹ்(அலை)
3)இத்ரீஸ்(அலை)
4)இப்ராஹீம்(அலை)
5)இஸ்மாயீல்(அலை)
6)இஸ்ஹாக்(அலை)
7)யஃகூப்(அலை)
8)யூஸுப்(அலை)
9)லூத்(அலை)
10)ஹூத்(அலை)
11)ஸாலிஹ்(அலை)
12)ஷூஐப்(அலை)
13)மூஸா(அலை)
14)ஹாருன்(அலை)
15)தாவூத்(அலை)
16)சுலைமான்(அலை)
17)ஐயூப்(அலை)
18)துல்கிப்லு(அலை)
19)யூனுஸ்(அலை)
20)இல்யாஸ்(அலை)
21)அல்யஸவு(அலை)
22)ஜக்கரியா(அலை)
23)யஹ்யா(அலை)
24)ஈஸா(அலை)
25)முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆகும்.
Thank you Siddque
http://www.siddique.my/Naalum.html
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments:
Post a Comment