அன்னை ஸவ்தா (ரலி)
பாகம். 2
மணத்திற்கு இசைவு..
🌸திருமணத்திற்கு இசைவு
என்னை யார் மணந்து கொள்வார்கள்? இன்னும் எனது மக்களையும் என்னைப் போலவே யார் கவனித்துக் கொள்வார்கள் ? என்று இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஹாலா) கேட்கிறார்கள். கவலைப்படாதீர்கள்! நீங்கள் சம்மதித்தால் நான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பெண்ணை அணுகி அவர்களின் விருப்பத்தைத் தெரிந்து வருகிறேன் என பெருமானாரின் அனுமதியோடு ஸவ்தா அவர்களின் இல்லம் சென்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களது சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட செய்தியை முதலில் ஸவ்தா (ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள். ஸவ்தா அவர்கள் அபிசீனியாவில் இருமுறை கண்ட கணவையும், அவர்களது கணவர் ஸக்ரான் (ரலி) அவர்கள் இறப்பெய்வதற்கு முன்பு கனவுக்கு விளக்கமளித்ததுடன் அண்ணல் அவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதையும் நினைவு கூர்ந்து திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். பின்னர் அவரது தந்தையை சந்திக்கச் செல்கிறார்.
அங்கே வயதான அவரது தந்தை கவ்லாவை வரவேற்று உபசரித்தார். வந்த நோக்கத்தைக்கேட்க,
🌸இறைதூதர் முஹம்மதவர்கள் உங்கள் மகளை மணக்க விரும்புகிறார் என்றதும், ” ஹுவ கரீமுன்- அவர் நல்லமனிதராயிற்றே! உமது தோழி ஸவ்தா என்ன சொல்கிறார் எனக் கேட்டார் பெரியவர். அவருக்கும் இதில் விருப்பம் தான் என்றதும், ” சரி முஹம்மதிடம் எங்கள் முழு சம்மதத்தையும் தெரிவியுங்கள்” என மகிழ்ச்சி பொங்க பதில் கூறினார் தந்தை.
ஸவ்தாவோ ஐந்து பிள்ளைகக்குத் தாயாக இருந்தார். திருமணம் செய்து கொளவதில் எனக்குத் தடையில்லை. உலகிலேயே மிகச் சிறந்த மனிதரை மணப்பதில் எனக்கு விருப்பம் தான்.ஆனால் ஏற்கனவே நான்கு குழந்தைகளை வைத்திருக்கும் அவர்களுக்கு எனது பிள்ளைகளையும் சேர்த்து மேற் கொண்டும் சுமையாக இருக்குமே என தனது ஆதங்கத்தைவெளிப்படுத்தினார் ஸவ்தா அவர்கள்.
அதற்கு நபியவர்கள், அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும். மனம் விரும்பி வாழும் நல்லோருக்கு இவையெல்லாம் சுமையாக இராது என்று ஆறுதல் கூறி அனுப்பினார்கள்.
விதவைத் திருமணம்
🌸கதீஜா (ரலி) அவர்கள் இறந்து ஒரு மாதத்திற்குப்பின் நுபுவ்வத் 10-ஆம் ஆண்டில், ரமளான் மாதத்தில் திருமணம் இனிதே நடநதேறியது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களுக்கு 400 திர்ஹம்களை மஹராகக் கொடுத்து மணமுடிக்கிறார்கள். நபியவர்களுக்கு தனது குழந்தைகளையும் பராமரித்து வளர்ப்பதற்கு பக்குமான பொறுப்புள்ள ஒரு மனைவி தேவைப்பட்டது.
இவரும் நபியவர்களைவிடவும் ஐந்து வயது மூத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஸவ்தா (ரலி) அவர்களுக்கு வயது ஐம்பத்தி ஐந்து. நபியவர்களின் வயது ஐம்பது.
நபியவர்கள் மூலம் இவர்களுக்கு குழுந்தை எதுவும் பிறக்கவில்லை.
இவர்கள் கறுப்பு நிறமாக இருந்தததால் “கறுப்பழகி” என்ற பொருளில் ஸவ்தா” என அழைக்கப்பட்டார்கள்.
நற்பண்புகள்
🌸இவர்கள் அழகுமிக்கவர்கள். உயரமானவர்கள்.நீண்ட கரங்களைப் பெற்றவர்கள்.ஈகைக் குணம் படைத்தவர்கள்.நற்பண்பு வாய்க்கப் பெற்றவர்கள்.எனவே தான் ஆயிஷா (ரலி) அவர்களும் ” ஸவ்தா (ரலி) அவர்களைப் பார்க்கும் பொழுது அவர்களின் அழகிய உடலுக்குள் என் ஆன்மா இருந்திருக்கக்கூடாதா? என்று எண்ணத்தோன்றும்” என்று கூறினார்.
ஸவ்தா (ரலி) அவர்கள் தம்மிடம் உள்ளதை ஏழை எளியவர்களுக்கு அள்ளி வழங்குவதில் நிறைவடைவார்கள். ஒரு முறை கலீபா உமர்(ரலி) அவர்கள் ஒரு பை நிறைய பொற்காசுகளை அன்பளிப்பாக வழங்கியபோது இது என்ன என்று கேட்க திர்ஹங்கள் என்றார்கள். அவை யாவற்றையும் அடுத்தநாள் மிச்சம் மீதமின்றி தர்மம் செய்துவிட்டார்கள்.
தனது நாளையும் ஆயிஷாவுக்கு அளித்தல்
🌸வயோதிகம் அடைந்த ஸவ்தா (ரலி) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் பிரியமாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்தவர்களாக, ஒருநாள் நபிகளாரிடம் வந்து ” அல்லாஹ்வின் தூதரே! எல்லோருக்கும் வழங்கியது போல எனக்கும் ஒரு நாள் குடும்ப வாழ்க்கைக்கு ஒதுக்கியிருந்தீர்கள். அந்த ஒரு நாளை ஆயிஷாவுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறேன் என்றார்கள்.
ஹிஜாபுடைய வசனம் இறங்குதல்..
அடுத்த தொடரில்...
தொடரும்....இன்ஷா அல்லாஹ்
ப(பி)டித்தால் பகிரலாம்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
No comments:
Post a Comment