Wednesday, March 6, 2019

அன்னை ஸவ்தா (ரலி) பாகம். 3


சஹாபி பெண்மணிகள் வரலாறு🌸

      அன்னை ஸவ்தா (ரலி)
                          பாகம். 3
ஹிஜாபுடைய வசனம் இறங்குதல்..

🌸ஸவ்தா(ரலி) அவர்கள்  விசயமாக ஹிஜாபுடைய வசனம் அருளப்பட்டது. அதற்கு முன்னர் மனைவியர் யாவரும் இரவுக் கடனை (மலஜல உபாதைகளை) நிறைவேற்றச் செல்வதுண்டு. உமர் (ரலி) அவர்கள் , பெருமானாரின் மனைவியர் பர்தா அணிந்தால் நன்றாக இருக்குமே  என் அடிக்கடி கூறுவதுண்டு. அது விசயமாக இறைவனின் உத்தரவு வராததால் நபி (ஸல்) அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு நாள் இரவு ஸவ்தா (ரலி) அவர்கள்  தமது கழிவறைக் கடனை நிறைவேற்ற வெளியே வந்தார்கள்.அப்போது அங்கே வந்த உமர் (ரலி) அவர்கள் அவர்களின் உடல பருமனையும் உயத்தையும் வைத்து யார் எனப் புரிந்து கொண்டு, அவர்களை அழைத்து உம்மை யார் என்று அடையாளம் கண்டு கொண்டேன் என க்கூறிய சில நாட்களில் ஹிஜாப் பற்றிய வசனம் இறங்கியது.

அறிவித்த நபிமொழிகள்

🌸இவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் ஆதாரபுர்வமான ஐந்து நபிமொழிகளை உலகிற்கு வழங்கி ஹதீஸ் வரலாற்றில் பெருமையைச் சேர்க்கிறார்கள்.அவை அபூ தாவூது, நஸாயீயில் பதிவாகியுள்ளன. இவர்கள் தெிவித்த நபிமொழிகளை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி),யஹ்யா இப்னு அப்துல்லாஹ் அல் அனஸாரி போனறோர் அறிவத்துள்ளார்கள்.

மரணம்
🌸ஸவதா (ரலி) அவர்கள் முஆவியா(ரலி) ஆட்சிகாலத்தில் ஹிஜ்ரி 54ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் மதீனாவில் மரணமடைந்தார்கள்.
ஸவ்தா (ரலி) அவர்கள் மரணடடைந்த போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தரையில் தலைவைத்து ஸுஜூதில் விழுந்துவிட்டார்கள். காரணம் கேட்டபோது ” நீங்கள் அல்லாஹ்வின் அத்தாட்சியைப் பார்த்தால் ஸுஜூது செய்யுங்கள்” என்ற நபி மொழியின்படி ஸவ்தா (ரலி) அவர்களின் மரணம் அல்லாஹ்வின் அத்தாட்சியல்லவா? அதனால் தான் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்தேன் எனறார்கள்.
எனக்குப்பின் நீங்களெல்லாம்  வீட்டிலேயே இருங்கள் என்று கூறிச் சென்றதை அணுவளவும் பிசகாது பேணி நடந்ததன் காரணமாக இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் வீட்டை விட்டே வெளியே செல்லவில்லை. ஹஜ்ஜு செய்வதற்கக் கூடச் செல்லவில்லை. ஹிஜ்ரி 21-ல் இவர்கள் உலகு நீத்த பொழுது தான் இவர்களின் உடல் வீட்டை விட்டு வெளியேறியது.
இவர்களின் மீதும். அன்னை ஸபிய்யா அவர்கள் மீதும் கொண்ட மரியாதையின் காரணமாக இவர்களின் வீடுகளை அவற்றின் புதிய உரிமையாளர் களிடமிருந்து   முஆவியா (ரலி) அவர்கள் 1,80,000 திர்ஹங்களுக்கு விலைக்கு வாங்கினார் என்று இவர்களைப்பற்றிய  வரலாறு கூறுகிறது.

உமர் (ரலி) அவர்களின் காலத்தில் ஈரானிலுள்ள ஜலூலா என்ற இடத்தில் நடந்த போரில் இவர்களின் மகன் அப்துர்ரஹமான் வீரமரணம் அடைந்தார் என்று வரலாறு கூறுகிறது.
(முற்றும்)

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: