Ramadan 01, 1444 - INDIA
Ramadan 02, 1444 - KSA
السلام عليكم و رحمة الله و بركاته
أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ
بسم الله الرحمن الرحيم
அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,
அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி
அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்
யா அல்லாஹ் !
கிருபையுள்ள நாயனே !
கருணையுள்ள ரஹ்மானே !
இரக்கத்தின் இரட்சகனே !
ரஜபுடைய மாதத்தில் கிருபை செய்து ஷபானில் ஆரோக்கியம் தந்து ரமழானை அடையச் செய்த ரப்பே ரஹ்மானே உனக்கே எல்லாப் புகழும்
அந்த சிறப்புடைய மாதத்தை நீ சொன்ன விதத்தில் கண்ணியப் படுத்தும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக
நீ கூறிய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்ற தவ்பீக் செய்வாயாக
முதல் பத்தில் எல்லா ரஹ்மத்களையும் இரண்டாம் பத்தில் பாவமன்னிப்பையும் மூன்றாம் பத்தில் நரக நெருப்பிலிருந்து விடுதலையும் தந்து கிருபை செய்வாயாக
உடல் ஆரோக்கியத்தோடு நோன்பு அத்தனையையும் முழுமையாக நிறைவேற்ற கிருபை செய்வாயாக
உடலாலும் உள்ளத்தாலும் உணர்வாலும் உடையாலும் தூய்மையாய் வணங்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக
மேல்மிச்சமான நபிலான வணக்கங்களையும் உனக்கு தன்றி செலுத்தும் திக்ர்களையும் அன்றாடம் செய்வதற்கு அருள் புரிவாயாக
சஹருடைய இப்தாருடைய உணவில் பரக்கத்தை அருள்வாயாக
எங்கள் குற்றம் குறைகள் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக
தர்மசிந்தனையை மேலோங்கச் செய்து ஏழை எளியோருக்கு உதவி செய்ய அருள் புரிவாயாக
ஜகாத்தை முறையாய் கணக்கிட்டு சதக்காவோடு சேர்த்து வழங்க தவ்பீக் செய்வாயாக
கடைசி பத்திலே முழுமையாய் இஹ்திகாப் இருந்து உன் அளப்பரிய அருளை பெறுவதற்கு கிருபை செய்வாயாக
லைலத்துல் கதர் என்ற சிறப்புற்ற இரவை அடையவும் அந்த இரவில் பொழியும் அத்தனை அருள் கிருபைகளையும் மொத்தமாய் பெற்றுக் கொள்ளும் பாக்கியமும் தந்தருள்வாயாக
உற்றார் உறவினர்களோடு ஒன்றிணைந்து மனமகிழ்ச்சியோடு ஈத் பெருநாளை கொண்டாட உதவி செய்வாயாக
எல்லா நிலைகளிலும் உனக்கு நன்றி செலுத்தி வாழும் நல்லடியார்களாக எங்களை ஆக்குவாயாக
யாரெல்லாம் நோயுற்றிருக்கிறார்களோ அவர்கள் நோயை குணப்படுத்துவாயாக
யாரெல்லாம் தேவையுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தேவைகளை நிறைவேற்றுவாயாக
கடனில் மூழ்கியவர்களின் கடனை நிவர்த்தி செய்வாயாக
எங்களின் எல்லாவிதமான துஆவையும் ஏற்றுக் கொள்வாயாக
யா அல்லாஹ்!
உன்னை மட்டுமே வணங்குகிறேன்
உன்னிடம் மட்டுமே உதவியும் தேடுகிறேன்.
ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
ஆமீன்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments:
Post a Comment