07.04.2023 FRIDAY
Ramadan 15, 1444 - INDIA
Ramadan 16, 1444 - KSA
السلام عليكم و رحمة الله و بركاته
أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ
بسم الله الرحمن الرحيم
அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,
அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி
அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்
யா அல்லாஹ்!யா ரஹ்மான்!யாரஹீம்!
துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இவ்வேளையில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் தொழவும் நோன்பு நோற்கவும் வாய்ப்பளித்த உனக்கே எல்லாப்புகழும்
எங்களை இரட்சிக்கும் ஏக இறைவா!
எங்களுக்கு நீ அளித்துள்ள பிள்ளைச் செல்வத்திற்கு எத்துனை கோடிமுறை உனக்கு நன்றி செலுத்தினாலும் அவை உனது இந்த கொடைக்கு ஈடாகாது.
உனக்கு எங்களால் இதற்கு இணையான நன்றி செலுத்தவே முடியாது !
அனைத்தையும் அறிந்தவனே
இரட்சகனே! அவர்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தருவாயாக!
அவர்களுக்கு எங்கள் மனம் பதை பதைக்கும் எந்த ஆபத்துகளும் இடர்பாடுகளும் ஏற்படாமல் பாதுகாப்பாயாக !
எதிரபாராத விபத்துகளி லிருந்து எங்களையும் அவர்களையும் காப்பாற்றுவாயாக
எங்கள் ரப்பே! எங்கள் பிள்ளைகள் நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக,உனக்கு நன்றி செலுத்தும் அடியார்களாக வாழ வைப்பாயாக!
அவர்களுக்கு நல்ல நண்பர்களைத் தருவாயாக!
அவர்கள் பெறும் கல்வி இம்மைக்கும்,மறுமைக்கும்,நாட்டிற்கும்,
வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் பலனுள்ளதாக ஆக்குவாயாக!
அவர்களை வழிகேட்டின் பால் அழைத்துசெல்லும்
இவ்வுலக ஆசாபாசங்கலிருந்து அவர்களை உன் தூங்காத கண்கொண்டு பாதுகாப்பாயாக
உன்னுடைய ஹலானான ரிஜ்கைக் கொண்டு
அவர்கள் பிறரிடம் தேவையாகாமல் மன நிறைவுடன் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீண்ட ஆயுளும் பெற்று வாழ அருள்
புரிவாயாக
அவர்கள் நல்ல வாழ்க்கைத் துணையை அடைந்து நல்ல குழந்தைகளைப் பெற்று அவர்களின் இல்லறம் சிறக்க அருள் புரிவாயாக!
யா அல்லாஹ்!
நீ அளித்த இந்த பிள்ளைகள் பெற்றோர்களான நாங்கள் வாழும் காலமெல்லாம் எங்கள் கண்களையும்
உள்ளங்களையும் குளிரச்செய்யும் வகையில் நற்செயல்கள் செய்பவர்களாக ஆக்குவாயாக!
எங்கள் மறைவிற்குப் பிறகும் எங்களுக்கு துஆ செய்பவர்களாக ஆக்குவாயாக!
ربنا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
25:74. “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! .
14:40 رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ ۖ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ
14:40. (“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!
”رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَـكَ وَ مِنْ ذُرِّيَّتِنَآ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
2:128. “எங்கள் இறைவனே! எங்கள்( இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
யா அல்லாஹ்!
உன்னை மட்டுமே வணங்குகிறேன்
உன்னிடம் மட்டுமே உதவியும் தேடுகிறேன்.
ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
ஆமீன்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
No comments:
Post a Comment