Friday, February 23, 2024

21.02.2024 WEDNESDAY





21.02.2024 WEDNESDAY

Shaʿbān 10, 1445 - INDIA
Shaʿbān 11, 1445 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته 

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم 

அல்ஹம்துலில்லாஹ்! 

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

அதிகாலையில்   தன்னை நினைவூகூற வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் 

‎اللَّهُمَّ ارْحَمْنِي بِتَرْكِ الْمَعاصِي أَبَدًا مَا أبْقَيْتَنِي ، وَارْحَمْنِي مِنْ أَنْ أَتَكَلَّفَ مَا لاَ يَعْنيني ، وَارْزُقْني حُسْنَ النَّظرَ فِيمَا يُرْضِيكَ عَنِّي ، اللَّهُمَّ بَديعَ السَّمَواتِ وَالأرْضِ ذَا الجَلاَلِ وَالإكْرَامِ وَالعِزَّةِ الَّتِي لاَ تُرَامُ ، أَسْأَلُكَ يَا الله ، بِجَلالِكَ وَنُورِ وَجْهَكَ أَنْ تُلْزِمَ قَلْبِي حِفْظَ كِتَابِكَ كَما عَلَّمْتَنِي ، وَارْزُقْنِي أَنْ أَتْلُوَهُ عَلَى النَّحْوَ الَّذي يُرْضِيكَ عَنِّي ، وَأسْأَلَُكَ أَنْ تُنَوِّرَ بِالْكِتَابِ بَصَرِي ، وَتُطْلِقَ بِهِ لِسَانِي ، وَتُفْرِّجَ بِهِ عَنْ قَلْبِي ، وَتَشْرَحَ بِهِ صَدْرِي ، وَتَسْتَعْمِلَ بِهِ بَدَنِي ، وَتُقَوِّيني عَلَى ذَلِكَ ، وَتُعِينُني عَلَيْهِ ، فَإنَّهُ لاَ يُعينُني عَلَى الْخَيْر غَيْرُكَ وَلاَ يُوَفِّقُ لَهُ إِلَّا أَنْتَ "

யா அல்லாஹ்!  என்னை நீ உலகில் வாழ வைக்கின்ற காலமெல்லாம்   பாவமான செயல்களை நிரந்தரமாக விட்டுவிட  அருள் புரிவாயாக!

எனக்குத் தேவையற்ற எந்த காரியத்திற்காகவும் நான் சிரமம் எடுத்துக் கொள்ளாமலிருக்க அருள் புரிவாயாக!'

உன் திருப்பொருத்தத்தைப் பெற நல்ல சிந்தனையைக் கொடுப்பாயாக!

யா அல்லாஹ்! வானங்கள் பூமியை புதுமையாகப் படைத்தவனே! 
எவரும் பெற முடியாத மதிப்பும் மாண்பும் மாட்சிமையும் பொருந்தியவனே!

அல்லாஹ்வே! ரஹ்மானே! உன் மகத்துவத்தின் பொருட்டால், உன் திருமுகத்தின் ஒளியின் பொருட்டால்,
  நீ எனக்குக் கற்றுத் தந்ததின்படி உன் வேதத்தை மனனம் செய்வதை என் உள்ளத்திற்கு கட்டாயமாக்கி விடு என்று நான் கேட்கிறேன்
, நீ திருப்தியடையும் விதத்தில் அதை நான் ஓதுவதற்கு நீ அருள்புரிவாயாக!

அல்லாஹ்வே! வானங்கள், பூமியை முன்மாதிரி இன்றி படைப்பவனே!

யாரும் பெற முடியாத மதிப்பும், மாண்பும், மாட்சிமையும் பொருந்தியவனே!

  உன் வேதத்தைக் கொண்டு என் பார்வையை ஒளிமயமாக்குவாயாக!
என் நாவை அதைத் தொடர்ந்து ஓத இலகுவாக்கிவிடுவாயாக!

   அதன் மூலம் என் உள்ளத்தை விரிவாக்கிவிடுவாயாக!!

 அதன்படி செயல்பட என் உடலை ஈடுபடுத்திவிடுவாயாக!

 ஏனெனில், சத்தியத்தின் பேரில் உதவிசெய்பவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. 

உன்னைத் தவிர வேருயாரும் அதற்கு நல்லுதவி செய்திடவும் முடியாது!

யா அல்லாஹ்!

உன்னையையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆமீன்





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: