22.02.2024 THURSDAY
Shaʿbān 11, 1445 - INDIA
Shaʿbān 12, 1445 - KSA
السلام عليكم و رحمة الله و بركاته
أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ
بسم الله الرحمن الرحيم
அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,
அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி
அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்
யா அல்லாஹ் ! உன் பால் எங்களை அன்புள்ளவர்களாக ஆக்குவாயாக
எங்களின் பார்வையில் எங்களை தாழ்ந்தவர்களாக ஆக்குவாயாக
மக்களின் பார்வையில் எங்களை மதிப்புமிக்கவர்களாக ஆக்குவாயாக
தீய குணங்களை எங்களை விட்டும் தூரமாக்குவாயாக
மரண தருவாயில் நாங்கள் ஈமானில் உறுதியாக இருக்கச் செய்வாயாக!
பெரும் அச்சம் பீடிக்கும் போது பாதுகாப் பளிப்பாயாக
நிரந்தரமான சுவனத்தில் எங்களை நுழையவைப்பாயாக
உனது கருணையினால் எங்களது தலைவனே! ஏக இறைவனே!
فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில் என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” 12:101
رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. 14:41
யா அல்லாஹ்!
உன்னையையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்
ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!
ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
No comments:
Post a Comment