Thursday, April 1, 2021

சுபஹானல்லாஹ்" ""உம்மத்தின்-மீது-நாயகம்-ஸல்- அவர்களின்- அக்கறை""



thank you assalam whatsapp group


சுபஹானல்லாஹ்"
""உம்மத்தின்-மீது-நாயகம்-ஸல்-
       அவர்களின்-        அக்கறை""

ஒரு சமயம் உயிரினும் மேலான கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் பேரக் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். 

அப்போது பேரர் ஹசன் (ரலி) அவர்களுக்கு உதட்டிலும் ,  பேரர் ஹுசைன் (ரலி)  அவர்களுக்கு கழுத்திலும் முத்தமிட்டார்கள். இந்த விஷயத்தை ஹசன் (ரலி) அவர்கள் தாயார் மூஃமீன்களின் தாயார் சொர்க்கத்தின் பெண்களின் தலைவி அன்ணை பாத்திமா நாயகி (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள் .

 பாத்திமா நாயகி (ரலி )அவர்கள்,  நபிகள் நாயகம் (ஸல் )அவர்களிடம் வந்து "நாயகமே பேரர்கள் மத்தியில் முத்த விஷயத்தில் ஏன் பாகுபாடு செய்தீர்கள் " என்று வினவினார்கள்.  

அருமை மகளே!இவர்கள் பெரியவர்களான பின்னர் ஹசன் (ரலி ) நஞ்சு ஊட்டப்பட்டு இறப்பார்கள்  !!!அதனால்தான் உதட்டில் முத்தம் கொடுத்தேன், இளயவர் ஹுசைன் கழுத்து வெட்டப்பட்டு இறப்பார்கள் !!!அதனால்தான் கழுத்தில் முத்தமிட்டேன் என்று விளக்கமளித்தார்கள்.

 இச் செய்தியை செவியுற்ற அன்னை பாத்திமா நாயகி (ரலி )அவர்கள் அழுதுக் கொண்டே கேட்கிறார்கள் நாயகமே! ஒவ்வொரு இறைத் தூதருக்கும் ஒரு விஷேசமான பிரார்த்தனையை அல்லாஹ்  வழங்கியுள்ளானே,  அது போன்று அல்லாஹ் தாங்களுக்கும் வழங்கியுள்ளானே அதைக்கொண்டு உங்களுடைய பேரர்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும் " என்று கெஞ்சுகிறார்கள் . 

அப்போது அண்ணலார் பெருமானார் (ஸல் ) அவர்கள் கண் கலங்கியவர்களாக மகளே அதை மறுமையில் எனது சமுதாயத்தாரின் நலனுக்கு வேண்டி மாற்றி வைத்து விட்டேன் என்று கண்ணீர் மல்க கூறினார்கள்  . எனவே அதனை எனது பேரக் குழந்தைகளுக்காக இங்கு பயன் படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்ர்கள் .  
அண்ணல் பெருமானார் (ஸல்)  அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்தாருக்கு சிறப்பு பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு,  நான் எனது பிரார்த்தனையை மறுமை நாளில் எனது சமுதாயத்தாருக்கு வேண்டி பரிந்துரை செய்ய பத்திரப்படுத்திவிட்டேன் "

(ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)  .
முஸ்லிம்.) 

தன் குடும்பத்தினர் ஏதேனும் பிரட்சனையில் சிக்கிக் கொண்டால்,  உடனே தன்னிடம் உள்ள பணப் பலம், படைப்பலம்,  ஆட்சி அதிகாரப் பலம் போன்றவற்றை பயன் படுத்தி  அதில் இருந்து விடுவிப்பதற்கு வழி தேடுவோரைத்தான் இவ்வுலகம் கண்டிருக்கும்.  

ஆனால் தமக்குரிய விஷேச உரிமைகளைக் கூட தனது சமுதாயத்தாருக்காக பயன்படுத்துவேன் , இங்கு எனது குடும்பத்தாருக்கு பயன்படுத்த மாட்டேன்,  என்றுரைத்த அண்ணலம் பெருமானார் அவர்கள் போன்று தங்கள் சமுதாயத்தாரின் மீது அக்கரை உள்ள  தலைவரை இவ்வுலகம் இதுவரை கண்டதில்லை , இனிமேல் காணப்போவதும் இல்லை , சிறந்த தலைவருக்கு இதுவே முன்னுதாரணம் .

அப்படி பட்ட நம் ரசூல் நாயகம் ஸல் ல ல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் திரு குடும்பத்தார்களை நாம் நேசம் வைப்போம் 
இம்மை மறுமை இரண்டிலும் வெற்றி பெறுவோம் .




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: