பெற்றதாயினும்தொன்னூற்றொன்பது மடங்கு கருணை மிக்கவன் அல்லாஹ்;தாய்ப்பறவை தன் குஞ்சுகளிடத்தில் காட்டுகின்ற அன்பைவிட ஆயிரம் மடங்கு அன்பை நம்மீது பொழிபவன் அல்லாஹ்.
Tuesday, March 31, 2009
தூஆ
எனது இறைவனே! ஈமானை எனக்கு விருப்பமானதாக ஆக்கிவை. எனது இதயத்தில் அதை அழகியதாக ஆக்கிவை.
குப்ரையும் (நிராகரிப்பு) தீய செயல்களையும் மாறு செய்வதையும் எனக்கு வெருப்பானவைகளாக ஆக்கிவை.
என்னை நேர்வழி அடைந்தவர்களில் ஒருவராக ஆக்கிவை.
எனது இறைவனே! எனக்கு பயன் தரக்கூடைய கல்வியை கற்றுக் கொடு. எனக்கு நீ கற்று கொடுத்த கல்வியை கொண்டு எனக்கு பலன்களை கொடு. எனக்கு மேன் மேலும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!
இறைவனே! ஹிதாய்த் என்ற நேர்வழியையும் தக்வா என்ற பயபக்தியையும்,பாவமற்ற பத்தினித் தனத்தையும், பிறரிடம் தேவையாகத செல்வத்தையும், உன்னிடம் நான் வேண்டுகிறேன்.
என் இறைவனே! எங்களின் ஆத்மாக்களுக்கு அதற்குரிய பய பக்தியை கொடு. அவற்றை பரிசுத்தமானவைகளாக ஆக்கிவைப்பாக.
நீயே ஆவற்றை பரிசுத்த படுதுபவர்களில் மேலானவன், நீயே அவற்றைப் பாதுகாப்பவன். நீயே அவற்றி எஜமானன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment